மாநாடு படத்தில் நடந்த பிரச்னை.. தீர்வுக்காக சிவகார்த்திகேயனை நாடிய வெங்கட் பிரபு.. சபையில் உடைத்த SK

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படமான பராசக்தி படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்நிலையில் படக்குழுவினர் படம் தொடர்பான புரோமோசன் பேட்டி அளித்தனர். அப்போது சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். படத்தில் சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பானது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம் பேக் படமாக இந்த படம் மாறியது.

Sivakarthikeyan Opens About Venkat Prabhu Team Approach For Acting Maanadu After First Scheduled

இந்த படத்தின் படப்பிடிப்பு காலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டது என்ற தகவல் வெளியானது. குறிப்பாக சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் பிரச்னை என்று ஒரு தகவலும், சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் பிரச்னை என்று தகவல்கள் உலா வந்தது. பெரும் போராட்டத்தை அடுத்தே மாநாடு படத்தை ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இப்படி இருக்கையில், நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி புரோமோசன் பேட்டியில் பேசுகையில் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

மாநாடு: அதாவது" மாநாடு படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்த பின்னர் படத்தை நிறுத்தி விட்டார்கள். அப்போது படத்தை என்னை வைத்து பண்ணலாமா என்று கேட்டார்கள். அப்போது நான், இந்த படம் கட்டாயம் பெரிய வெற்றியை ஈட்டும். வெங்கட் பிரபு சாரிடம் இந்த படத்தை சிம்பு சாரை வைத்து எடுப்பது தான் சரி என்று சொல்லுங்கள். இந்த கதையில் அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன் என்று கூறினார்.

Sivakarthikeyan Opens About Venkat Prabhu Team Approach For Acting Maanadu After First Scheduled

புறநானூறு: சிவகார்த்திகேயன் இவ்வாறு தெரிவித்துள்ளது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், பராசக்தி படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அப்போது அந்த படத்திற்கு புறநானூறு என்று பெயர் சூட்டி இருந்தனர். தேதிகள் பிரச்னையால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக, அதன் பின்னர் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X