எமோஷ்னலான சிவகார்த்திகேயன்.. உங்களையும் நா.முத்துகுமாரையும் மிஸ் செய்றேன்.. SK ஓபன்!
சென்னை: இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்து, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள படம், நேசிப்பாயா. இந்தப் படத்தினை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், சரத்குமார், குஷ்பு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட, நடிகர் சிவகார்த்திகேயன் யுவன் சங்கர் ராஜா குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
விடாமுயற்சி படம் பொங்கல் ரேசில் இருந்து விலகியதும் தான், ஆக்ஷன் பொங்கலாக இருக்கவேண்டிய சூழல் மொத்தமாக மாறி, காதல் பொங்கலாக மாறிவிட்டது. பிப்ரவரி 14இல் ரிலீஸ் செய்யலாம் என காத்துக் கொண்டு இருந்த படங்கள் எல்லாம், பொங்கலை டார்கெட் செய்து வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், கடந்த 12ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விஷாலின் மதகத ராஜா படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அந்த வகையில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் பேமிலி டிராமாவைத்தான், மைய்யமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், விஷ்ணு வர்தன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழில் படத்தை இயக்குகின்றார் என்பதால் ரசிகர்கள் மத்தியில், படம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
யுவன்: படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் யுவன் சங்கர் ராஜா குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, " யுவன் சங்கர் ராஜா சாரைப் பொறுத்தவரையில் பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் வளர்ந்து வரும் நடிகர்கள், பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. தனக்கு இந்த படத்தின் கதை பிடித்துள்ளது, அந்தக் கதைக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என நினைக்க கூடியவர். இந்த குணம் அவரது அப்பா இளையராஜா சாரிடம் இருந்து வந்திருக்கும் என நினைக்கின்றேன்.

தி கோட்: யுவன் சாரின் மொத்த கெரியரையும் எடுத்துப் பார்த்தால் எல்லா படங்களையும் ஒரே மாதிரிதான் கையாண்டுள்ளார். அதனால்தான் அவர் கிரேட்டஸ்ட் ஆட் ஆல் டைம் என்பதைக் கடந்து அவரை பியாண்ட் டைம் என்றுதான் கூறவேண்டும். ஒருநாள் இரவு காரில் வந்து கொண்டு இருந்தபோது யுவன் சாரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். ரொம்பவும் எமோஷ்னல் ஆகிவிட்டேன். உடனே அவருக்கு போன் செய்து, சார் உங்களையும் நா. முத்துகுமார் சார் காமினேஷனையும் ரொம்பவே மிஸ் செய்கின்றேன் சார் எனக் கூறினேன்.
நினைவுகள்: யுவன் சாரின் பாடல்களைத்தான் அதிகம் எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கேட்டுள்ளேன். அவரது ஒரு பாடலைக் கேட்டால், உடனே எனது கல்லூரி நினைவுகள், கல்லூரியில் நான் செய்த செயல்கள்தான் நினைவுக்கு வரும்" என பேசினார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்தது. சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











