சிவகார்த்திகேயனால் சிம்புவுக்கு ஏற்பட்ட சிக்கல்... அதிரடி முடிவு எடுக்கப் போகும் நெல்சன்!!

சென்னை : சூப்பர்ஸ்டாரின் 169வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கவுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

தற்போது பீஸ்ட் படத்தில் கவனம் செலுத்திவரும் நெல்சன், அந்தப் படத்திற்கு பின்பு தலைவர் 169ல் இணைகிறார்.

இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றி நெல்சன் திலீப்குமாரை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைத்துள்ளது. மேலும் தற்போது பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். வரும் ஏப்ரலில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில், அவரது அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

தலைவர் 169 படம்

தலைவர் 169 படம்

இந்த படங்களை தொடர்ந்து அவர் தற்போது தலைவர் 169 படத்திற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். சூப்பர்ஸ்டாரை வைத்து அவர் இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

பீஸ்ட்டில் பிசி

பீஸ்ட்டில் பிசி

படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் பணிகளை மேற்கொண்டுவரும் நெல்சன், இதையடுத்து தலைவர் 169 படத்தின் வேலைகளை துவங்கவுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறவுள்ளது.

கௌரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன்?

கௌரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன்?

நெல்சனின் நீண்டகால நண்பரான சிவகார்த்திகேயன் அவருடன் டாக்டர் படத்தில் இணைந்ததுடன், டாக்டர், பீஸ்ட் படங்களில் பாடலும் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் பணிபுரிந்த போதே சிறந்த நண்பர்கள். இந்நிலையில் அவர் தலைவர் 169 படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தலைவர் 169ல் சிம்பு?

தலைவர் 169ல் சிம்பு?

இதனிடையே சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து முதல்முதலில் நெல்சன் வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். சிம்புவுடன் நெல்சனுக்கு இருந்த நீண்டகால நட்பையடுத்தே இந்தப் படத்தின் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் சிம்பு தலைவர் 169 படத்தில் நடிப்பார் அல்லது பாடுவார் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

இவர்கள் இருவருமே நெல்சனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் இவர்கள் இருவரில் யாரை தலைவர் 169 படத்தில் நடிக்க வைப்பார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

Recommended Video

Sivakarthikeyan super Fun Speech in RRR grand Pre-Release event at Chennai
யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

அதனால் அவரது படத்தில் நடிக்க சிம்பு அல்லது சிவகார்த்திகேயன் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது புதிராக காணப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் தற்போது நெல்சன் திலீப்குமார் சிக்கியுள்ளார். விரைவில் இதற்கான பதில் அவரிடமிருந்து ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X