twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்... மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் பாண்டிராஜ்!

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

    |

    சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் பாண்டிராஜும் மீண்டும் இணைகின்றனர்.

    தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயனை, தனது மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். இதையடுத்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவாகார்த்திகேயன் நடித்தார். அதன் பிறகு இருவருவம் சேர்ந்து படம் பண்ணவில்லை.

    Sivakarthikeyan - Pandiraj teamup again for Sun pictures

    மெரினா படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் பாண்டிராஜின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக பாண்டிராஜ் அறிவித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் படத்தில் சிவா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி! இளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி!

    படம் தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இது சன் பிக்சர்ஸ் படம் என்பதால், ஒவ்வொரு அறிவிப்பையும் அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Sivakarthikeyan and director Pandiraj are teamingup again for a new movie, produced by Sun pictures.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X