Parasakthi 1st Single: சதமடித்த ஜி.வியின் முதல் பாட்டு.. அடி அலையே மெலடி சும்மா ஜம்முனு இருக்கே!

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, கீர்த்தி ஷெட்டி, பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்தை வரும் பொங்கலுக்கு அதாவது ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இது ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பராசக்தி படத்திற்கு தனி கதை உள்ளது. அதாவது படத்தை முதலில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. மேலும் சூர்யாவே இந்த படத்தில் நடிப்பதாகவும் இருந்தது. அப்போது இந்த படத்தின் பெயர் புறநானூறு என்று பெயரில் அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பது மற்றும் நடிப்பதில் இருந்து சூர்யா விலகினார். அதன் பின்னர்தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வந்தார். சிவகார்த்திகேயனுக்கு முன்னதாக தனுஷ் இந்த படத்தில் நடிக்க முயற்சி எடுத்தார் என்றும், ஆனால் அவரிடம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேதிகள் இல்லை என்பதால் கமிட் ஆக முடியவில்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டது.

Sivakarthikeyan Parasakthi 1st Single Adi Alaye Released Which Sung By Sean Roldan Dhee
Photo Credit:

இப்படி இருக்கையில் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவும், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. படத்திற்காக இலங்கைக்குச் சென்று படக்குழு படமாக்கியது. பராசக்தி என்ற டைட்டிலானது கடந்த 1952ஆம் ஆண்டு வெளியான அரசியல் படம். இந்த படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து படத்தின் பெயர் உரிமத்தை வாங்கினர். ஆனால் தெலுங்கில் பராசக்தி என்ற டைட்டிலை விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படமான சக்தித் திருமகன் படத்திற்காக, தெலுங்கில் பராசக்தி என்ற டைட்டிலை பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் இந்த படத்திற்காக அந்த டைட்டிலை விட்டுக் கொடுத்து, தனது படத்திற்கு சக்தித் திருமகன் என்று பெயரிட்டார்.

Sivakarthikeyan Parasakthi 1st Single Adi Alaye Released Which Sung By Sean Roldan Dhee
Photo Credit:

இப்படி இருக்கையில், இந்த படத்தின் முதல் பாடலான அடி அலையே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஷான் ரோல்டன் மற்றும் தீ பாடியுள்ளனர். செம மெலடியாக உருவாகியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்படியும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இந்த பாடல் உருப்பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X