Parasakthi Booking: திரும்பும் திசையெல்லாம் பராசக்தி புக்கிங்.. SKவே நினைத்து பார்க்காத ஓபனிங் உறுதி!
சென்னை: இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல் என்று சிவகார்த்திகேயன் சொன்னாலும், கடைசியில் அண்ணன் விஜய் பொங்கல் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார். இப்படி இருக்கையில் இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் ஆட்டம் தான் என்று உறுதி ஆகிவிட்டது. ஏதோ சராசரி கமர்ஷியல் படத்துடன் வந்திருந்தால் விஜய் படத்துடன் ஃபயரிங் விடும் அளவுக்கு சிவகார்த்திகேயனோ அவரது படக்குழுவோ தயாராக இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் படம் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்து பேசுவதாலும் தற்போதைய அரசியல் சூழல்கள் படத்திற்கு சாதகமாக இருப்பதாலும் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்துள்ளார்கள். இப்படி இருக்கையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்குவதில் பிரச்னை இருந்த வந்த நிலையில் தற்போது அந்த பிரச்னையும் தீர்ந்து விட்டதால், படத்தின் புக்கிங் வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவதால், பராசக்தி படத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 30 முதல் 40 சதவீத தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜன நாயகன் ரேஸிலேயே இல்லாததால், மொத்த தியேட்டர்களையும் பராசக்தி படக்குழு ரிலீஸுக்காக பெற்றுள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் சிவகார்த்திகேயனின் பராசக்தியுடன் தொடங்குவது மட்டும் இல்லாமல் பொங்கலை சிவகார்த்திகேயன் தான் ரூல் செய்யப் போகிறார்.

புக்கிங்: படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதும் பராசக்தி படத்திற்கு புக்கிங் பணிகள் தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படம் வெளியாவதால், புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட் மற்றும் தியேட்டர்களின் பாக்ஸ் ஆபீஸ் என டிக்கெட்டுகள் மளமளவென புக் ஆகி வருகிறது. இந்த புக்கிங்கை எல்லாம் பார்க்கும் போது, சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி படம் அவரது, திரைவாழ்க்கையில் இதுவரையில் இல்லாத அளவுக்கான பிரமாண்டமான ஓபனிங்காக இருக்கும் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.
மாஸ் ஓபனிங்: சிங்கிள் தியேட்டர்கள் தொடங்கி மல்டி ஃபிளக்ஸ்கள் வரை பராசக்தி ரிலீஸ் ஆவதால் ரசிகர்களும் டிக்கெட்டுகளை மாறி மாறி புக் செய்து வருவதால் படத்திற்கு பிரமாண்டமான பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் இருக்கும் என்று படக்குழு நம்புகிறது, இந்த பேச்சு கோலிவுட்டிலும் அதிகரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications











