Parasakthi First Review: பராசக்தி முதல் விமர்சனம்.. பந்தயம் அடிப்பது உறுதி.. உற்சாகத்தில் படக்குழு
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் சென்சார் சர்டிஃபிகேட் என்பது இந்தியாவில் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இப்படி இருக்கையில் படத்திற்கான வெளிநாட்டு சென்சார் எல்லாம் முடிவுற்று படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படி இருக்கையில் படத்தை வெளிநாட்டில் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம் படக்குழுவுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி உள்ள பராசக்தி படம், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகி உள்ள 100வது படம். இந்த படத்தில் முதலில் சூர்யா தயாரித்து நடிப்பதாக இருந்தது. ஆனால் தேதிகள் பிரச்னையால் சூர்யாவால் நடிக்க முடியவில்லை. இந்த படத்தின் கதையை பொறுத்தவரையில் 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற, மொழிப்போரை அதாவது இந்தி திணிப்பு எதிர்ப்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கமர்ஷியல் ஹிட்: மொழிப்போர், இந்தி திணிப்பு எதிர்ப்பு, தமிழ் பற்று என மிகவும் முக்கியமான தளங்களை படம் பேசியுள்ளதால், படம் கமர்ஷியலாக இல்லாமல், ஆர்ட் சினிமாவாக இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. குறிப்பாக ஜன நாயகன் மாதிரியான பக்கா கமர்ஷியல் படத்துடன் போட்டி போடும்போது, பராசக்தி படமும், கமர்ஷியல் படமாக இருந்தால்தான் அது ஒர்க்-அவுட் ஆகும். இல்லை என்றால் படுதோல்வி படமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. அதுவும் பொங்கல் விடுமுறையில் குடும்பம் குடும்பமாக வருவார்கள். அவர்களை தியேட்டருக்குள் அமர வைத்தால் தான், படம் ஹிட் ஆகும்.
முதல் விமர்சனம்: அப்படி இருக்கும்போது வெளிநாட்டில் படம் பார்த்தவர்கள் படத்தை சுதா கொங்கரா தரமான கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளார்கள் என்று பலரும் பாராட்டி உள்ளனர். இது மொத்த படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக மொழிப்போர் விஷயம் தொடர்பான காட்சிகளில் மிகவும் சீரியஸாகவும், திரைக்கதை நகர்வில் செம கமர்ஷியலாகவும் படத்தை இயக்கி உள்ளதால் படம், கட்டாயம் பந்தயம் அடிக்கும் என்றும் படக்குழு செம உற்சாகத்தில் உள்ளனர். மேலும் தமிழ் சினிமாவில் 25வது, 50வது 100வது படங்களில் வெற்றிகளை எட்டியவர்கள் வெகு சில நடிகர்கள்தான். இப்படி இருக்கும்போது, படத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள விமர்சனம் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Click it and Unblock the Notifications











