Parasakthi: கொக்கி போடும் காங்கிரஸ்.. கொளுத்தி போடும் அதிமுக காயத்ரி ரகுராம்.. பராசக்தி பஞ்சாயத்து

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான பராசக்தி படம் கடந்த 1965ஆம் ஆண்டு கால கட்டங்களில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில்,படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் களத்திலும் படத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திமுக கூட்டணிக்குள் கொஞ்சம் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது படம், இந்தி திணிப்பின் போது அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி எப்படி எல்லாம் நடந்து கொண்டது என்று படமாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் உத்தரவினால் காவல்துறையும் மத்திய காவல் படையும், சிறப்பு காவல் படையும் இணைந்து கொண்டு போராட்டக்காரகளை எப்படி எல்லாம் ஒடுக்கியது என்பது குறித்து படமாக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Parasakthi Movie Creates Great Messy in TN Politics INDIA Allaince

அதிருப்தியில் காங்கிரஸ்: இதனால் படத்தை காங்கிரஸ் கட்சியின் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், " சாணக்கியா செய்தி உண்மையா ? பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்க பா . இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை விண்ணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

கூட்டணியில் பிரச்னை: இவரது இந்த பதிவுக்கு நடிகையும் அதிமுகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம், " பராசக்தி படத்தை பார்த்தேன். இந்த படத்தில் காங்கிரஸ் தான் இந்தியைத் திணித்தது என்று திமுக உறுதியாக கூறுகிறது. இந்த படம் வெளிப்படையாகவே இண்டியா கூட்டணிக்கும் காங்கிரஸ்க்கும் எதிராக உள்ளது. இண்டியா கூட்டணிக்குள் இந்த படம் பெரிய பிளவை ஏற்படுத்தும் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள், அந்த கூட்டணிக்குள் திமுக இருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தவெக கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் பராசக்தி படம் வெளியாகி இந்த புகைச்சலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X