Parasakthi Vs Amaran: பாக்ஸ் ஆபீஸில் தெறிக்க விடும் பராசக்தி.. அமரனை ஓரம் கட்டியதா?
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் நேற்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வரவேற்பும் சிறப்பாகவே கிடைத்தது. இது பாக்ஸ் ஆபீஸிலும் ரியாக்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் பாக்ஸ் ஆபீஸில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் கை கொடுத்த படமான அமரன் படத்துடன் பராசக்தி ஓப்பனிங் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
டான் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தி படம் வெளியானால் சில மாதங்களில் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஜன நாயகன் வெளியானால் அது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் பேச்சுகள் அடிபட்டது. இந்நிலையில் ஜன நாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் இன்னும் வெளியாகவில்லை என்று எல்லாம் பேச்சுக்கள் அடிபடுகிறது.

சிறப்பான வரவேற்பு: போதாத குறைக்கு காங்கிரஸில் மாணிக்கம் தாக்கூர் பராசக்தி படத்தை தோல்விப் படம் என்று விமர்சிக்கவே தொடங்கிவிட்டார். பற்றாத குறைக்கு அதிமுகவின் காயத்ரி ரகுராம் திமுக கூட்டணியில் பிளவை உருவாக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். ஆனாலும் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது.
வசூல்: சாக்நிக் வலைதளத்தின் தகவலின் படி, பராசக்தி படம் முதல் நாளில் ரூபாய் 12.35 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மதராஸி படம் முதல் நாளில் ரூபாய், 13.65 கோடிகள் வசூல் செய்தது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் அமரன் படம் ரூபாய் 24.7 கோடிகள் வசூலித்ததாக சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. சாக் நிக் வலைதளத்தின் தகவலின் படி இந்தியாவில் அமரன் வசூலை பராசக்தி நெருக்கக்கூடவில்லை. அதேபோல், படத்திற்கு வெளிநாடுகளிலும் பெரிய அளவுக்கு வசூல் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பராசக்தியின் முதல் நாள் வசூல் ரூபாய் 30 முதல் ரூபாய் 35 கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











