Parasakthi Day 2 Official Box Office: பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்.. பராசக்தி 2 நாளில் அள்ளிய வசூல்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளியான படம் பராசக்தி. 1965ஆம் கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின் பங்கு எப்படி இருந்தது என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதை திரைக்கதையாக வடிவமைத்து படமாக்கி உள்ளார்கள். இப்படி இருக்கும்போது இந்த படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் ரூபாய் 27 கோடிகளுக்கு மேல் படம் வசூலித்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் படம் ரூபாய் 51 கோடிகளை வசூலித்துள்ளது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Sivakarthikeyan Parasakthi Movie Day 2 Official Box Office Collection Cross RS 51 Crores World Wide
Photo Credit:

வசூல் கணக்கு: இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் அவரது படம் இரண்டு நாட்களில் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் வசூலிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. பராசக்தி படம் கடந்த 1965 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர், அதாவது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்டு படத்தை உருவாக்கி உள்ளது படக்குழு. படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, காளி வெங்கட், சேத்தன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் மிகப்பெரிய வரவேற்பை முதல் இரண்டு நாட்களில் பெற்றது.

விஜய் ரசிகர்கள்: பராசக்தி படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்கு நெகடிவ் புரோமோசன்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால் படத்திற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருவதால் படம் இந்த ஆண்டு பொங்கலில் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. பொங்கலுக்கு விஜயின் ஜன நாயகன் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு படம் வெளியாகாததால், ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக பரசாக்தி படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களைக் கொடுக்கிறார்கள் என்ற விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X