Parasakthi deleted scence: அட செம மொக்க.. பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!
சென்னை: சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் வெளியாகி ரூ 100 கோடியை வசூலித்து இருக்கும் நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது படமான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இறுதிசுற்று, சூரைப்போற்று என பல வெற்றிப்படத்தை கொடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை 'டான் பிக்சர்ஸ்' சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். 1960 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளார். ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் வெளியான இரண்டு நாளில் ரூ.50 கோடி வசூலை எட்டியதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

சிவகார்த்திகேயனின் பராசக்தி: அதைத்தொடர்ந்து கார்த்திக் நடித்த 'வா வாத்தியார்' படம் வெளியானது. ஆனால், படம் முதல் நாளிலேயே தியேட்டரில் காத்து வாங்கியது. இதையடுத்து, ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ஜனவரி 14ந் தேதி வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. ஜீவாவின் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் பராசக்தி படத்தின் வசூல் கணிசமாக குறைந்தது. இதையடுத்து நேற்று தயாரிப்பு நிறுவனம் படம் வெளியான 11 நாட்களில் ரூ 100 கோடியை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீக்கப்பட்ட காட்சி: இந்நிலையில் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சஸ்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் செழியன் மற்றும் சின்னதுரை இருவரும் இந்தியில் பேசிக்கொள்ளும் காட்சியும், இருவரும் விளையாட்டுத்தனமாக சண்டை போடும் காட்சியும் உள்ளது. நீக்கிய இந்த காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் செம மொக்க சீன் நல்லவேலை டெலிட் பண்ணீங்க என்றும், இன்னும் சிலர் படத்தையே டெலிட் செய்து இருக்கலாம், 150 ரூபாய் எனக்கு மிச்சமாகி இருக்கும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











