Parasakthi: தமிழ் வாழ்க என தியேட்டரில் முழங்கிய ரசிகர்கள்.. முரட்டு சம்பவமா இருக்கே.. வீடியோ
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், படம் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் படத்தை மோசமாக விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இப்படி இருக்கும்போது, பராசக்தி படம் பார்த்த தியேட்டரில் இருந்த ரசிகர்கள் படத்தின் கிளைமாக்ஸின் போது, "தமிழ் வாழ்க.. தமிழ் வாழ்க" என்று கோஷமிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பராசக்தி படம் கடந்த 1965 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர், அதாவது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்டு படத்தை உருவாக்கி உள்ளது படக்குழு. படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, காளி வெங்கட், சேத்தன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் மிகப்பெரிய வரவேற்பை முதல் இரண்டு நாட்களில் பெற்றுள்ளது. மூன்றாவது நாளான இன்று அதாவது ஜனவரி 12ஆம் தேதி படத்திற்கு பகல் காட்சிகள் சுமாரான புக்கிங்கையே பெற்றுள்ளது.

தமிழ் வாழ்க: இப்படி இருக்கையில் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து பாசிடிவான விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரும்போது, படத்தில் வெல்க தமிழ், தமிழ் வாழ்க என்ற வசனம் வரும். அப்போது மொத்த மொத்த திரையரங்கமும் இணைந்து தமிழ் வாழ்க என்ற கோஷத்தை எழுப்பி உள்ளனர். ரசிகர்களின் இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராகுல் காந்தி: இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த மில்டன் என்ற எக்ஸ் தள வாசி, " You will never ever Rule Over the People of TamilNadu in Your Entire Life" என்று ராகுல் காந்தி சொன்னது பிஜேபிக்கு மட்டுமல்ல. தமிழ் வாழ்க" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











