Parasakthi Censored: சென்சார் பந்தயத்தில் ஜன நாயகனை வென்ற பராசக்தி.. சிவகார்த்திகேயன் ரூட் கிளியர் ஆகிடுச்சே!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய முதல் தமிழ் படம் என்ற, சாதனையைப் படைத்துள்ளது. படக்குழுவுக்கு எல்லாமே சிறப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில், ஒன்று மட்டும் பிரச்னையாக இருந்தது என்றால் அது, சென்சார் கிடைக்காதது தான்.

ஒரு வழியாக இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கோலிவுட் வட்டாரத்தில் சென்சார் பந்தயத்தில் ஜன நாய்கன் படத்தை பராசக்தி வென்று விட்டது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Sivakarthikeyan Parasakthi Movie Got U A Censor Certificate After Revising Committee

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வரும் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், ஜன நாயகன். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இரண்டு படங்களுக்குமே, தீர்க்க வேண்டிய பெரிய பஞ்சாயத்து நீண்டு வந்தது.

சென்சார் பிரச்னை: ஜன நாயகன் மற்றும் பராசக்தி என இரண்டு படங்களும் இந்த வாரத்தின் இறுதியில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது. இப்படி இருக்கும்போது, படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டு படத்திற்கும் இன்னும் உள்நாட்டில் புக்கிங் தொடங்கப்படவில்லை. வெளிநாட்டில் இரண்டு படங்களுக்குமான புக்கிங் என்பது சிறப்பாக சென்று கொண்டுள்ளது.

ரிவைசிங் கமிட்டி: இதற்கு காரணம் இரண்டு படங்களும் இன்னும் உள்நாட்டில் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. பராசக்தி படத்தை பொறுத்தவரை யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக சென்சார் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் இணைந்து படத்திற்கு யு சான்றிதழ் வேண்டும் என்று முறையிட்டு பார்த்தனர். ஆனால் சென்சார் தரப்பில் தர மறுத்ததால், ரிவைசிங் கமிட்டிக்கு சென்றனர். ஆனால் அங்கும் யு/ஏ சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ்க்கும் குறுகிய காலமே இருப்பதால் யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X