Parasakthi: கலைஞர் இல்லாத பராசக்தியா? அண்ணா மட்டுமல்ல.. கலைஞரும் இருக்கிறாராம்.. இதுதான் பிரச்னைக்கு காரணமா?

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசக்தி படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள 25ஆவது படமாக உருவாகி உள்ளது. படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து புரோமோசன் வேலைகளைச் செய்து வந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படக்குழு அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. ஒருவழியாக பெரும் போராட்டத்திற்கு பின்னர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தியதற்கு பல காரணங்கள் செல்லப்பட்டது. குறிப்பாக இணையத்தில் இணையவாசிகள் பல காரணங்களை கூறி வருகிறார்கள். குறிப்பாக படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுப்பதாக சென்சார் தெரிவித்ததாகவும், படக்குழு யு சான்றிதழுக்காக ரிவைசிங் கமிட்டிக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. அடுத்து சென்சார் 23 கட்கள் சொன்னதாகவும், சென்சார் சொன்ன 23 கட்களை படத்தில் நடைமுறைப்படுத்தினால் படத்தின் சாராம்சம் சீர்கெடுவது மட்டும் இல்லாமல், 1965 காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை வேறு வடிவில் படமாக்கியதாக மாறிவிடும் என்று படக்குழு முறையிட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது.

Sivakarthikeyan Parasakthi Movie Has Kalaignar Karunanidhi Scene With CN Annadurai - Netizens Post

பேரறிஞர் அண்ணாதுரை: இப்படி இருக்கையில் படத்தில் பேரறிஞர் அண்ணா இருப்பது போன்ற ஒரு காட்சி டிரைலரில் இடம் பெற்றிருந்தது. சென்சார் தரப்பில் அண்ணாவின் காட்சிகளை நீக்கிவிட்டு வாருங்கள் நாங்கள் படத்திற்கு சென்சார் வழங்குகிறோம் என்று சென்சார் நிறுவனம் தெரிவித்ததாக சில இணையவாசிகள் பதிவிட்டு வந்தனர். இப்படி இருக்கையில் இணையவாசிகள் அண்ணா மட்டும் இல்லை படத்தில் கலைஞர் கருணாநிதி கதாபாத்திரமும் இருக்கிறது என்றும், அதனால் தான் அண்ணா தொடர்பான காட்சிகளை நீக்கச் சொல்லி உள்ளார்கள் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களின் கருத்துக்கு சில இணையவாசிகள், " கலைஞர் கருணாநிதி இல்லாத பராசக்தியா?" என்று பதில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Sivakarthikeyan Parasakthi Movie Has Kalaignar Karunanidhi Scene With CN Annadurai - Netizens Post

கலைஞர் இல்லாத பராசக்தியா?: அதாவது அண்ணா இருக்கிறார் என்றால், அவரது உயிருக்கு உயிரான தம்பிகளில் ஒருவரான கலைஞர் கருணாநிதியும் படத்தில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும்போது அண்ணாவின் காட்சிகளை நீக்கினால், கலைஞர் தொடர்பான காட்சிகளும் நீக்கப்பட்டு விடும் அதனால் தான் சென்சார் தரப்பில் அடிப்பிக் கூறியுள்ளார்கள் என்று பேசி வருகிறர்கள். மேலும் பராசக்தி என்பது கலைஞர் கருணாநிதி கதை, திரைக்கதை எழுதி உருவான படம் பராசக்தி. இந்த படம் கடந்த 1952ஆம் ஆண்டு வெளியானது. இதனால் பராசக்தி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பெயர் கலைஞர் கருணாநிதி தான். அதனால் இந்த படத்தில் கலைஞர் தொடர்பான காட்சி கட்டாயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X