Parasakthi Mistakes : பராசக்தியில் இத்தனை மிஸ்டேக்ஸா? கமர்ஷியலுக்காக கதையில் காலை வாரி விட்டாரா சுதா?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசக்தி படம் வெளியாகி பெரும்பான்மையான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பேசிய கடந்த கால வரலாறு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களும் எழுந்து வருகிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படத்தின் திரைக்கதையால் படத்தில் இதெல்லாம் பிரச்னையாக இருக்கேப்பா என்று சுட்டிக் காட்டி வருவதை தவிர்க்க முடியாது.
பராசக்தி 1965ஆம் ஆண்டு காலத்தில் நடைபெற்ற மொழிப்போர் களத்தை மையமாக கொண்டு படம் உருவாக்கப்படுகிறது என்ற தகவல் அதை உறுதி செய்யும் படத்தின் டிரைலர் என மொத்தமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை, நம் மண்ணில் நடைபெற்ற மொழிபோரை கண் முன் கொண்டு வரப் போகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது.

படம் பார்த்த ரசிகர்களில் சிலர், படத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மொழிப்போர் குறித்து மிகவும் தீவிரமாக படம் பேசாமல், காதல், டூயட் என்ற் டிராக்கை மாற்றி, முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாகவும் அதில் ஆங்காங்கே வசனங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்த காட்சிகளை இடைசொருகலாக சேர்த்துள்ளனர் என்ற விமர்சனம் பிரதானமான விமர்சனமாக இருக்கிறது.
மரியாதை?: மேலும், அதேபோல் ரவி மோகன் கதாபாத்திரம் வரலாற்றில் நடைபெற்ற மொழிப்போர் படுகொலைகளுக்கு அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் இல்லை. மாறாக ரவி மோகன் கதாபாத்திரத்தை படத்தில் வைத்து, மொழிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறைக்கு தனி மனிதனின் தனிப்பட்ட பகை பெரும் காரணம் என்பது போல காட்சி படுத்தி இருப்பது, மொழிப்போர் தியாகிகளின் தியாகத்திற்கு சரியான மரியாதை கொடுக்காதது போல உள்ளது.

ஏமாற்றம்: அதேபோல் மொழிப்போர் குறித்து மாணவர்கள் மத்தியில் விவாதங்கள் நடைபெறுபவை ஏற்புடையது என்றாலும், ரயிலை மறித்து போராட்டங்கள் நடைபெற்றது வரலாற்றில் நடைபெற்றது என்றாலும், படத்தின் முதல் காட்சியே ரயிலைக் கொளுத்தும் காட்சியாக வைத்தது, ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்துவதற்கான கமர்சியல் படத்தில் மாஸான காட்சி போல வைத்தது போல, இந்த படத்தின் அரசியலுக்கான திரைக்கதைக்கு போதுமானதாக இல்லை. மேலும் மாணவர்கள் மத்தியிலான மொழிப்போர் தொடர்பான விவாதங்கள் மேலோட்டமான தாகவே இருந்ததும் ஏமாற்றம் தான்.
கேள்வி: படத்தை கமர்ஷியலாகவும் பெரிய வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற நெருக்கடி இயக்குநர் சுதா கொங்கராவை இப்படியான திரைக்கதை எழுத வழி வகுத்திருக்குமோ என்ற கேள்விகள் எழாமல் இல்லை. கமர்ஷியல் வெற்றியை நோக்கி பராசக்தியை நகர்த்த வேண்டிய கட்டாயம் இப்படியான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் படமாக மாற்றி விட்டதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.


Click it and Unblock the Notifications











