அண்ணன் தம்பி பொங்கல் எல்லாம் இல்லை.. வேணா சென்சார் பொங்கல்னு வெச்சுக்கலாமா? பஞ்சாயத்தில் பராசக்தி!

சென்னை: அப்பாடா.. ஒரு வழியா ஜன நாயகன் சென்சார் பிரச்னை முடிந்தது அடுத்து ரிலீஸ் தேதிதான் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும்போது, சென்சார் தரப்பில் மேல் முறையீட்டுக்குச் சென்றுள்ளதால், ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்த பிரச்னை ஓடிக் கொண்டு இருக்கும்போது, நாளை வெளியாவதாக உள்ள பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் கிடைக்கவில்லை என்ற பஞ்சாயத்து ஓடிக் கொண்டு உள்ளது.

Sivakarthikeyan Parasakthi Movie in Big Trouble Movie Not Get Censor Till Now Team Went Court

அதாவது தொடக்கத்தில் படத்தை பார்த்த சென்சார் தரப்பில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி உள்ளனர். ஆனால் படக்குழு தரப்பில் சென்சார் பரிந்துரைத்த மாற்றத்தைச் செய்தால் அது படத்தின் கதையை மட்டும் இல்லாமல் வரலாற்றில் நடந்தவற்றை திரித்து சொல்லுவது போல மாறிவிடும் என்று வாதிட்டுள்ளனர். படத்திற்கு எப்படியாவது சென்சார் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு, இப்போது வரை சென்சார் கிடைக்காதது பெரும் ஏமாற்றம் தான். இப்படி இருக்கையில் இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவவே, விவரம் தெரிந்தவர்கள் இது அண்ணன் தம்பி பொங்கல் இல்லை, இது சென்சார் பொங்கல் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று பேசி வருகிறார்கள்.

மொழிப்போர்: நாளை அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றுக்காக படக்குழு காத்திருக்கிறது என்றும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்ட பராசக்திக்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பான நீதிமன்றத்தை நாடிய நிலையில் , சென்சார் வாரியம் பரிந்துரைத்த மாற்றங்களை செய்தும் ஏன் தணிக்கை சான்று தரவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. படம் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், தணிக்கை வாரிய மறு ஆய்வுக் குழு கேட்ட வரலாற்று தரவுகளால் பராசக்தி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற பேச்சும் ஓடிக் கொண்டு உள்ளது.

ரிலீஸ் ஆகுமா?: வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதை என்ற நிலையில் போதிய தரவுகள் இல்லை என வாரியம் கூறியதாக தகவல். இந்த தகவல் மொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. படத்திற்கு இன்று சென்சார் கிடைக்கவில்லை என்றால், படம் நாளை வெளியாகாது. இது மட்டும் இல்லாமல், பராசக்தி படத்தின் ரிலீஸும் தள்ளிப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X