Parasakthi Pongal Day Box Office: தை பிறந்ததும் பிக்-அப் ஆன பராசக்தி வசூல்.. எந்த அளவுக்குனு தெரியுமா?

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி, சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து உருவான படம் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்தது. படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் படத்தை விஜய் ரசிகர்கள் தங்களது மோசமான மற்றும் போலியான விமர்சனங்கள் செய்வதால் படத்தின் வசூல் பாதிக்கிறது. நாங்கள் அதையும் எதிர்கொண்டுதான் வருகிறோம் என்று எல்லாம் தெரிவித்து வந்தார்கள். முதல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் இல்லை என்பது நிதர்சனம்.

இப்படி இருக்கையில் பொங்கல் தினமான நேற்று அதாவது ஜனவரி 15ஆம் தேதி பராசக்தி படம் கடந்த சில தினங்களைக் காட்டிலும் கூடுதலாகவே வசூலித்துள்ளது. அதாவது படம் மூன்றாவது நாளில் இருந்து நேற்றைக்கு முன் தினம் வரை தினமும் சுமார் 2 கோடிகள் அளவிலேயே இந்தியாவில் வசூலித்து வந்தது. ஆனால் பொங்கல் தினமான நேற்று தான் படம் ரூபாய் 5. 10 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan Parasakthi Movie Pongal Day Box Office Collection Turns Positive

பொங்கலில் கலை கட்டிய பாக்ஸ் ஆபீஸ்: இதனால் பராசக்தி படம் மீண்டும் பாசிடிவான வசூலை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், மாட்டுப் பொங்கலான இன்றும், காணும் பொங்கலான நாளையும், இந்த வாரத்தின் கடைசி நாளான வரும் ஞாயிற்றுக் கிழமையும் என வரும் வாரங்களில் படத்திற்கு வசூல் என்பது அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.

Sivakarthikeyan Parasakthi Movie Pongal Day Box Office Collection Turns Positive

வசூல்: மேலும் இந்த காலகட்டத்தில் படத்தைப் பார்க்கும் ரசிகர்களால் படம் மேலு பலரிடம் செல்லும் என்றும் படக்குழு நம்புகிறது. முதல் இரண்டு நாளில் ரூபாய் 51 கோடிகளுக்கு மேல் வசூலித்த பராசக்தி, இன்றைய தினம் வரை சுமார் ரூபாய் 75 முதல் 80 கோடிகள் வரை உலகம் முழுவதும் வசூலித்திருக்கும் என்ற பேச்சு கோலிவுட்டில் வலம் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X