Parasakthi Booking: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜன நாயகனைக் காணோம்.. கல்லா கட்ட ஆரம்பித்த பராசக்தி
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசக்தி படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான அனைத்து வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். பராசக்தி படத்தின் ரிலீஸ்க்கும் பல பிரச்னைகள் வந்து கொண்டே இருந்தது. நேற்று முன் தினம் தான் படத்திற்கு சென்சார் சான்றிதழே கிடைத்தது. இந்நிலையில் படத்தின் புக்கிங் தொடங்கி உள்ளது. பொங்கல் ரேஸில் பராசக்தி படம் தற்போது கொஞ்சம் முந்திக் கொண்டுள்ளது.
அதாவது பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தில் நடிகர் சேத்தன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் 1960 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் குறித்தும் இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்தும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை தனது செம்மொழி படத்தின் கதை என்று உதவி இயக்குநர் மற்றும் எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் ஆதாரங்கள் போதிய அளவுக்கு இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் படத்தின் சென்சாரில் யு சான்றிதழுக்காக படக்குழு போராடி, ரிவைசிங் கமிட்டி வரை சென்றது. ஆனாலும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கிடைத்தது என்று தகவல் வெளியானது.

புக்கிங்: இப்படி இருக்கையில் படத்தின் புக்கிங் சென்னை போன்ற பெரு நகரங்களில் வெகு சிறப்பாகவே தொடங்கிவிட்டது. புக்கிங்கில் இன்னும் பி.வி.ஆர் தியேட்டர்களில் தொடங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தனித் திரையரங்குகள், பி.வி.ஆர் அல்லாத மல்டிஃபிளக்ஸ்கள் உள்ளிட்ட திரையரங்குகள் சிலவற்றில் புக்கிங் தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள எம்.ஆர் தியேட்டரில் முதல் காட்சி காலை 8.50க்கே திரையிட புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜன நாயகன்: பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்களுக்கு இடையில் தான் போட்டியே என்று ஒரு நிலை உருவாகிவிட்டது. ஆனாலும் இதில் தற்போது வரை கொஞ்சம் முன்னிலையில் இருப்பது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் தான். அதே நேரத்தில் ஜன நாயகனுக்கு சென்சார் பிரச்னை முடிந்து விட்டால், அதற்கான புக்கிங் மற்றும் வசூல் என்பது ஜெட் வேகத்தில் இருக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.



Click it and Unblock the Notifications











