பராசக்தி படத்துக்கு வந்த அடுத்த பிரச்னை.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. படம் ரிலீஸ் ஆகுமா?

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் தற்போது படத்திற்கு ஒரு புது பிரச்னை வந்துள்ளது. அதாவது படத்தின் கதை தனது கதை என்றும், அதை திருடி படமாக்கிவிட்டார்கள் என்றும் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு குறித்த தகவல்கள் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25வது படம், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான 100வது படம். இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் மீது தனி கவனம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், படத்தின் பெயர், அதன் கதைக்களம் மிகவும் முக்கியமானதாக பார்க்கபடுகிறது. பராசக்தி என்ற டைட்டிலில் ஏற்கனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கதை, திரைகதை,வசனம் எழுதி உருவான பராசக்தி படத்தின் டைட்டில் என்பதால் படத்தின் மீது தனி கவனம் குவிந்துள்ளது.

Sivakarthikeyan Parasakthi Movie Under Story Theft Case Chennai High Court Produce Interim order
Photo Credit:

அரசியல்: தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் வெளியாவது புதிது அல்ல. அதேநேரத்தில் அரசியலில் நேரடியாக களமிறங்கி உள்ள, விஜயின் ஜன நாயகன் படத்துடன் நேரடியாக மோதுவதால், இந்த மோதலும் அரசியலாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்திற்கு பிரச்னை மேல் பிரச்னை வந்து கொண்டு உள்ளது.

ரிவைசிங் கமிட்டி: அதாவது, ஏற்கனவே படத்திற்கு யூ சான்றிதழ் வேண்டி, சென்சார் குழுவினருடன் முறையிட்டு, அடுத்ததாக ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளது படக்குழு. இந்த பிரச்னையே இன்னும் ஓயாத நிலையில் தற்போது படக்குழு மேலும் ஒரு பிரச்னையில் சிக்கி உள்ளது. அதாவது, தனது கதையை திருடி 'பராசக்தி' என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

Sivakarthikeyan Parasakthi Movie Under Story Theft Case Chennai High Court Produce Interim order
Photo Credit:

இடைக்கால உத்தரவு: இவரது இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து ஜனவரி 2 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. படத்திற்கு தொடர்ந்து ஏதாவது பிரச்னை வந்து கொண்டே இருப்பதால் பராசக்தி படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X