பராசக்திக்கும் பிரச்னை? தளபதியே தண்ணி குடிக்கிறாரு.. சிவகார்த்திகேயன் எம்மாத்திரம்.. அலையவிடும் CBFC

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் இரண்டு மாஸான படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று திரைத்துறையினர் கணக்கு போட்டுக் கொண்டு இருந்தார்கள். அதற்கு காரணம் நடிகர்கள் என்பதைக் காட்டிலும் இயக்குநர்கள் என்பதுதான் பார்வையாக இருந்தது. இதில் நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியானது.

இதனால் பராசக்தி படத்திற்கு சென்சார் கிடைத்துவிடும் இதனால், சிவகார்த்திகேயன் படம் பொங்கல் விடுமுறையை ஒற்றைப் படமாக ரூல் செய்யும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு இழுத்து கல் வைத்துள்ளது சென்சார் போர்டு நிறுவனம் என்ற பேச்சுக்கள் அதிகரித்துள்ளது.

Sivakarthikeyan Parasakthi Not Get Censor Certificate Till Now Fans asking There Is Any problem
Photo Credit:

பராசக்தி படத்தைப் பார்த்த சென்சார் போர்டு நிறுவனம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தருவதாக சொன்னதாகவும், யு சான்றிதழுக்காக படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், ரிவைசிங் கமிட்டியும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தருவதாக கூறியதாக பேச்சுக்கள் அடிபட்டது. இப்படி இருக்கையில் தற்போது வந்துள்ள தகவல் சிவகார்த்திகேயன் படத்திற்கும் 1008 பிரச்னைகள் இருக்கும் போலயே என்று யோசிக்க வைக்கிறது.

கோலிவுட்டில் பேச்சு: அதாவது தற்போது கோலிவுட் வட்டாரத்தில், " சென்சாரில் படத்தை திரையிட்ட போது பராசக்தி படத்திற்கு மொத்தம் 23 கட்கள் சொல்லி உள்ளதாகவும், குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளை நீக்கவோ, அல்லது அதில் உள்ள வசனங்களை மாற்றவோ பரிந்துரை செய்துள்ளனர். அதன் பின்னர் தான் சுதா கொங்கரா ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்து, மும்பையில் படத்தை திரையிட்டு உள்ளனர். மேலும் அங்கு, இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளை நீக்கினாலோ, அல்லது அதில் மாற்றங்கள் செய்தாலோ, அது உண்மையாக நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் சாரத்தை பலவீனப்படுத்தும் என்று எடுத்துச் சொல்லி உள்ளார்.

Sivakarthikeyan Parasakthi Not Get Censor Certificate Till Now Fans asking There Is Any problem
Photo Credit:

ரசிகர்கள் கேள்வி: இப்படியான சம்பவங்களுக்குப் பின்னரும் படத்துக்கு இதுவரை சென்சார் சான்றிதழ் என்பது கிடைக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது என்ற பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளது. படக்குழுவும் சென்சார் சான்றிதழை வாங்கி விட்டது போல எங்கேயும் பதிவிடவில்லை. இதனால் பராசக்தி படம் வெளியாகுமா என்ற கேள்வியும் குழப்பமும் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலரும் தளபதியே தண்ணி குடிக்கிறாரு, சிவகார்த்திகேயன் எம்மாத்திரம் என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X