பட்டையைக் கிளப்பும் பராசக்தி புக்கிங்.. அமரனை ஓரம் கட்டப்போவது உறுதி போலயே.. இது SK பொங்கல் தானா?
சென்னை: இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தில் ரவி மோகன், அதர்வா,ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் லண்டனில் அமரன் படத்தை விட அதிக அளவில் டிக்கெட் புக்கிங் ஆகி உள்ளது என்ற தகவல் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பராசக்தி படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஜனவரி 3ஆம் தேதி புறநகர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது, படக்குழுவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

அதாவது படத்திற்காக முன்பதிவு இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. அந்த வகையில், படத்திற்கு லண்டனில் மட்டும் சுமார் 4000 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக, லண்டனில் படத்தை வெளியிடும் அகிம்ஷா என்டர்டைமெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ப்ரீ புக்கிங்: சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படம் என்றால் அது, அமரன் படம் தான். கடந்த 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படம் வசூலில் மட்டும் சுமார் 350 கோடிகளுக்கு மேல் அள்ளியது. ஆனால் அமரன் படத்திற்கே லண்டனின் முன் பதிவாக 3,600 டிக்கெட்டுகள் தான் விற்பனை ஆகி இருந்தது. அப்படி இருக்கும்போது பராசக்தி படத்திற்கு 4000 டிக்கெட்டுகளுக்கு மேல் முன் பதிவாகி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
மகிழ்ச்சி: ஏற்கனவே படத்தின் சென்சாருக்காக வெளிநாட்டில் படம் பார்த்தவர்கள், படம் பக்கா கமர்ஷியலாகவும், அதே நேரத்தில் அது பேசும் அரசியலை தெளிவாகவும் பேசி இருப்பதால், படம் கட்டாயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் எனவே கரன்சியை எண்ணத் தயாராக இருங்கள் என்று நம்பிக்கை அளிக்கும் விமர்சனங்கள் வந்துள்ளதால் படக்குழு மொத்தமாக உற்சாகத்தில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, படத்திற்கு லண்டனில் அதிகப்படியான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி இருப்பதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் படத்திற்கு இந்தியாவில் இன்னும் சென்சார் இன்னும் உறுதி ஆகவில்லை என்பதால் அதுவும் பலரது கவனத்தில் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











