Parasakthi: தலையில் வைத்து கொண்டாடிய கமல்ஹாசன்.. உடனே ரியாக்ட் செய்த படக்குழு.. சிவா ஸ்கோர் பண்றாரே!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான பராசக்தி படம் கடந்த 1965ஆம் ஆண்டு கால கட்டங்களில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில்,படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் களத்திலும் படத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் படக்குழுவை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

கமல்ஹாசனின் வாழ்த்துப் பதிவில், " அன்புள்ள இளவல் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பராசக்தி படத்தை பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலில் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் என்று கூறியுள்ளார்.

Sivakarthikeyan Parasakthi Production Team Says Thanks To Kamal Haasan And His Review
Photo Credit:

பின்குறிப்பு: இந்த பயோ ஃபிக்‌ஷனை இயக்கிய சுதா கொங்கராவுக்கும் வெற்றியை காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனுக்கும், படத்தில் சிறப்பாக நடித்த ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி. கே. சந்திரன் மற்றும் படத் தொகுப்பாளர் சதீஷ் சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் என வாழ்த்தி உள்ளார்.

இப்படி இருக்கையில், பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் பதிவில், " பராசக்தி படத்தின் முயற்சிக்கு வலுவாக ஆதரவாக நின்று, அருமையான வாழ்த்துகளை வழங்கிய மாண்புமிகு கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளது. பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் கொண்டு உள்ளது. மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர், படத்திற்கு 25 கட்கள் வழங்கப்பட்டாலும் ரசிகர்களை அதற்கு ஏற்ற வகையில் படக்குழு தயார் செய்து அதன் வெற்றிக்கு சரியான வழியை திட்டமிட்டது பாராட்டுக்குரியது என்று பாராட்டுகிறார்கள் ரசிகர்கள்.

Sivakarthikeyan Parasakthi Production Team Says Thanks To Kamal Haasan And His Review
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X