ஜன நாயகன் வசூலுக்கு ஆப்பு.. பராசக்தி ரிலீஸ் தேதியில் மாற்றம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா, நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இது அவரது இசையில் வெளியாகும் 100வது படம். மேலும் சிவகார்த்திகேயனுக்கு 25வது படம். படத்தை முதலில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வந்தது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளது. அதாவது படத்தை வரும் ஜனவரி 10ஆம் தேதியே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனால் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் விஜயின் ஜன நாயகன் படத்துடன் பராசக்தி நேரடியாக மோதுகிறது.

ஜன நாயகன்: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் விஜயின் கடைசி படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி, மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், மலேசியாவில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசக்கூடாது என்று மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளதாக, வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொங்கல் பந்தயம்: பராசக்தி படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே திரையுலகில் பரவி வந்த தகவல்தான். இந்நிலையில் படக்குழுவே இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களுக்குத்தான் கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. மேலும், பராசக்தி படத்தை திரையிடக்கூடிய தியேட்டர்கள் தவிர, ஜன நாயகன் திரையிடப்படும் தியேட்டர்களில் பராசக்தி படத்திற்கு ஜனவரி 10ஆம் தேதியில் இருந்தே இரண்டு காட்சிகள் ஒதுக்கி விடவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











