சூர்யாவிடம் அதுதான் பிரச்னை.. சிவகார்த்திகேயன் அதனால்தான் வந்தார்.. புறநானூறு பராசக்தியாக மாற இதுதான் காரணமாம்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட வசனங்களை மியூட் செய்ய சென்சார் அதிகாரிகள் சொன்னதால் மீண்டும் மறு தணிக்கைக்கு படம் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க முதலில் இப்படம் புறநானூறு என்கிற பெயரில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் ஏன் வெறியேறினார் என்பது பற்றி சுதா கொங்கரா பேசியிருக்கிறார்.
சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் சுதா கொங்கரா; அடுத்த படத்திலும் சூர்யாவுடன் கூட்டணி வைத்தார். அப்படத்துக்கு புறநானூறு என்றும் பெயர் வைத்தார். அதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா சில காரணங்களால் வெளியேற அவருக்கு பதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் உள்ளே வர; புறநானூறு திரைப்படம் பராசக்தி படமாக மாறியது.
சிவாவுக்கு 25ஆவது படம்: இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புகளை சந்தித்திருக்கும் இப்படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முதலில் 14ல் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் விஜய்யின் ஜனநாயகனுக்கு பராசக்தி படம் போட்டியாக ரிலீஸாகவிருக்கிறது. எனவே 2026ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ் சினிமா களைகட்ட தொடங்கியிருக்கிறது.

மறு தணிக்கை: இப்படம் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் கதையாக விரியும் என தெரிகிறது. மேலும் அதோடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களையும் படத்தில் இயக்குநர் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் படம் தணிக்கைக்கு சென்றபோது பல வசனங்களுக்கு அதிகாரிகள் மியூட் போட சொன்னதன் காரணமாக; பராசக்தி மீண்டும் தணிக்கைக்கு சென்றிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
சுதா கொங்கரா பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு சுதா கொங்கரா அளித்த பேட்டியில், "கொரோனா காலத்தில் சூர்யாவிடம் சொன்ன கதைதான் இது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறனும், நானும் நெருங்கிய நண்பர்கள். அப்போது நிறைய கதைகள் பேசினோம். எனக்கு இந்தக் கதை ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு சூர்யாதான் நெருங்கிய நண்பர். உடனே அவருக்கு ஃபோன் செய்து இந்த ஐடியாவை சொன்னேன். அவரும் ரொம்பவே ஆர்வமாகிவிட்டார். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. முக்கியமாக ஒரு பிரச்னை இருந்தது.
என்ன பிரச்னை?: அதாவது சூர்யாவிடம் தொடர்ச்சியாக ஷூட்டிங் இருந்தது. இதனால் இப்படத்தின் ஷூட்டிங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தக் கதையை தொடர்ச்சியாக ஷூட் செய்யவில்லை என்றால் செலவும் எகிறிவிடும். இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கதை இருக்கிறதா என தயாரிப்பாளர் அருண் விஷ்வாவும் கேட்டிருந்தார். உடனே சிவாவை சந்தித்து இந்தக் கதையின் ஐடியாவை சொன்னேன். உடனே அவர் தேதிகள் கொடுக்கிறேன். எங்கே கையெழுத்து போட சொன்னாலும் போடுகிறேன் என சொல்லி இப்படத்துக்குள் வந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











