கடைசி நேரத்தில் என்ன பிரச்னை? முக்கிய காட்சிகளை நீக்கனுமா? பராசக்தி டீம் எடுத்த தைரியமான முடிவு
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது சிவகார்த்திகேயனின் 25வது படம். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகும் 100வது படம். படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படி இருக்கும்போது படத்தில் சில காட்சிகளை நீக்கச் சொல்லி தணிக்கைகுழு தரப்பில் கட் தெரிவித்துள்ளார்கள். ஆனால் படக்குழு, தணிக்கை குழு குறிப்பிட்டுள்ள காட்சிகளை எல்லாம் நீக்கினால், படத்தின் மையக் கதையை ரசிகர்கள் மத்தியில் கடத்துவதில் தொய்வு ஏற்பட்டு விடும் என்று, யோசித்து உள்ளார்கள். இதையடுத்து படக்குழு மிகவும் தைரியமான முடிவை எடுத்துள்ளனர்.

பராசக்தி படத்தின் கதை என்பது 1960 காலகட்டங்களில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற, இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்காக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகப்படியான பணத்தை செலவு செய்து உருவாக்கி உள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்துடன் படக்குழு மோதுவதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
புரோமோசன் வேலைகள்: படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இது மட்டும் இல்லாமல், படத்திற்கான புரோமோசன் என்பது ரொம்பவும் விறுவிறுப்பாகவும், கண்காட்சி போன்று ஏற்பாடு செய்யப்பட்டும் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது, பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு தரப்பில் இருந்து, சில காட்சிகளுக்கு கட் சொல்லி உள்ளனர். அந்த காட்சிகளை நீக்கினால் படத்திற்கு சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தைச் சார்ந்தோர், இப்படம் மற்ற கமர்ஷியல் படங்களைப் போன்று என்றால், தணிக்கை குழு சொல்வது போல ஏதாவது ஒரு காட்சியை நீக்கிவிடலாம்.

தைரியமான முடிவு: ஆனால் இது 1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பதால், தணிக்கை குழு நீக்க சொன்ன காட்சிகளை நீக்காமல், படத்தை ரிவைசிங் குழுவுக்கு அனுப்பி, அங்கு தணிக்கை சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் கூட லேசாக ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











