சிவகார்த்திகேயனின் பராசக்தி ட்ரெய்லர்.. அஜித் படத்தை அசால்ட்டா அடிச்சிருச்சு.. அடுத்து ஜனநாயகன்தானா?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. யூடியூபிலும் ட்ரெய்லர் வெளியான கொஞ்ச நேரத்திலேயே வியூஸ் அள்ளுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்
சூரரைப் போற்று படத்துக்கு பிறகு பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன், அவரது சகோதரராக அதர்வா, வில்லனாக ரவி மோகன் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்துள்ளார். இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். ஏற்கனவே சுதா தேசிய விருது வென்ற இயக்குநர் என்பதால் இப்படத்தையும் அதேபோல் தரமாக கொடுப்பாரா என்ற கேள்வி திரைத்துறையில் எழுந்திருக்கிறது.
சூப்பர் கதை: அதுமட்டுமின்றி இது சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மீது அனைவருக்குமே நம்பிக்கை எழுந்திருப்பதற்கு காரணம்; அதன் கதைக்களம். ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் சுதா. எனவே இதன் மூலம் தமிழ்நாட்டின் பல அரசியல் இயக்கங்களின் வரலாறு எல்லாம் பேசப்படும் என தாராளமாக நம்பலாம்.

நேற்று வெளியான ட்ரெய்லர்: படமானது ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு முந்தைய நாள் ஜனநாயகன் வருகிறது. விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும்; இந்தப் பொங்கலில் சிவகார்த்திகேயன்தான் பந்தயம் அடிப்பார் என்று பலரும் சொல்கிறார்கள். சூழல் இப்படி இருக்க பராசக்தி ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரை பார்த்த எஸ்கே ரசிகர்களை கைகளில் பிடிக்க முடியவில்லை. அமரன் மாதிரியே இதுவும் மெகா ப்ளாக் பஸ்டர்தான் என உறுதி சொல்ல தொடங்கிவிட்டார்கள்.
பயங்கரமான ரெஸ்பான்ஸ்: எஸ்கே ரசிகர்களிடம் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் இதை கொண்டாடவே செய்கிறார்கள். ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு சீனும், ஃப்ரேமும், வசனமும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் காலங்காலமாக இருக்கிறார்கள். சரியான நேரத்தில் சரியான கதையுடன் பராசக்தி வருகிறது. இது தமிழ் சினிமாவிலேயே முக்கியமான படமாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்திவிட்டது என்றே சொல்லலாம்.
ரெக்கார்டு வைத்த பராசக்தி: இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்தில் யூடியூபில் 25 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரை மொத்தமே 24 கோடி பேர்தான் பார்த்திருக்கிறார்கள். அதேபோல் ஜனநாயகன் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. அதனை இதுவரை 36 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். எனவே குட் பேட் அக்லியை அசால்ட்டாக அடித்த பராசக்தி; கண்டிப்பாக ஜனநாயகன் ட்ரெய்லர் வியூஸையும் காலி செய்துவிடுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதேசமயம் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை ட்ரெய்லரை 25 கோடி பேர் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் 12 கோடி பேர்தான் லைக் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி Bot முறையை பயன்படுத்தி இந்த வியூஸை தயாரிப்பு நிறுவனம் அதிகரித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், ரஜினியைவிட சிவகார்த்திகேயன் பெரிய ஆள் இல்லை. கூலி பட ட்ரெய்லரையே 24 மணி நேரத்தில் 14.2 மில்லியன் பேர்தான் பார்த்தார்கள். ஆனால் பராசக்தி ட்ரெய்லரை அதைவிட அதிகம் பார்த்திருக்கிறார்கள் என சொல்லப்படுவதை சுத்தமாக நம்ப முடியவில்லை எனவும் ஒருதரப்பினர் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











