விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்.. புதிய சாதனை படைத்த பராசக்தி!

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் நடித்துள்ள 'பராசக்தி' படம் 10ம் தேதி வெளியாக உள்ளது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியான 3 நாட்களில் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை அலங்கரிக்கும் வகையில் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ரிலீசாக உள்ளன. எச் வினோத் இயக்கி இருக்கும் ஜனநாயகன் படத்தின் டிரைலர் ஜனவரி 3ந் தேதி வெளியானது, அடுத்த நாளே பராசக்தி டிரைலரும் வெளியிடப்பட்டது. பராசக்தி டிரைலரில் சிவகார்த்திகேயன் நடிப்பு , ரவி மோகனின் நெகட்டிவ் ரோல், சுதா கொங்கராவின் இயக்கம், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரின் கதாபாத்திரம் என டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Parasakthi sivakarthikeyan trailer
Photo Credit:

சாதனை படைத்த டிரைலர்: பராசக்தி டிரைலர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், இந்த டிரைலர் வெளியான 3 நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. பராசக்தி படம் கண்டிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் ஒரு படமாக இருக்கும் என டிரைலரை பார்ப்பவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் ஜனநாயகன் பட ட்ரைலர் சாதனையை பராசக்தி ட்ரைலர் முறியடித்ததாக சொல்லப்படுகின்றது

அதிருப்தியில் ரசிகர்கள்: ஜனநாயகன் ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. ஜனவரி 3ந் தேதி வெளியான ஜனநாயகன் படத்தின் டிரைலர் இதுவரை யூடியூபில் 41 மில்லியன் (4.1 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. ஆனால், ஜனவரி 4ந் தேதி வெளியான பராசக்தி படத்தின் டிரைலர் இதுவரை 50 மில்லியன் ( 5 கோடி) பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் விஜய்யை பின்னுக்கு தள்ளிய மகிழ்ச்சியில் உள்ளனர். கவலையில் இருக்கும் விஜய் ரசிகர்களி இவை அனைத்தும் திட்டமிட்டு நடக்கும் ப்ரோமோஷன் என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X