Parasakthi Update: தமிழும் தெலுங்கும் கலந்து அடிக்கும் ஸ்ரீலீலா.. அடடே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டாங்களே!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, பிரித்வி பாண்டியராஜ், ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ளார்கள். நடிகர் ரவி மோகன் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்திற்கான ரிலீஸ் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இப்படி இருக்கும்போது, படத்தில் தனது போர்ஷனுக்கான டப்பிங் வேலையை ஸ்ரீலீலா தொடங்கி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

புறநானூறு என்ற டைட்டில் உடன் நடிகர் சூர்யா தயாரித்து நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிய பின்னர், இந்த படத்தில் நடிக்க பலரும் முயற்சி செய்தார்கள். இப்படி இருக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததால், அதுவே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. அதன் பின்னர் படத்தின் டைட்டில் பராசக்தி என்று வைக்கப்பட்டதும், எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.

Sivakarthikeyan Parasakthi Update Sree Leela Starts Her Dubbing

ஸ்ரீலீலா: இப்படி இருக்கையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதற்காக தனது மற்ற படங்களின் தேதிகளை ஒத்தி வைத்துவிட்டு தேதிகள் ஒதுக்கியதால், இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய ஜனவரி 9ஆம் தேதியை படக்குழு முடிவு செய்தது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் பெரும் மோதல் இருக்கும் என்று பேச்சுக்கள் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது.

Sivakarthikeyan Parasakthi Update Sree Leela Starts Her Dubbing
புரோமோசன்: படம் வெளியாக இன்னும் இரண்டு மாத காலம் இடைவெளி இருந்தாலும் படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழு சிறப்பாக செய்து வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் டப்பிங் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் நடிகர் ரவி மோகன் தனது டப்பிங் பணிகளை முடித்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீலீலா தனது டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார் என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. படத்தில் ஸ்ரீலீலா தெலுங்கு பின்னணி குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாக நடித்துள்ளதால் , டப்பிங்கில் தமிழ் தெலுங்கு என இரண்டிலும் கலந்து கட்டி அடித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X