பராசக்தி எப்படி இருக்கு?.. பாட்ஷா மாதிரி மிரட்டல்.. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம விருந்துதான்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு முந்தைய நாள்தான் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கதை அருமையாக இருப்பதால் இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த படக்குழுவும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் சுதா கொங்கரா. அவர் இப்போது சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார். ஜனவரி பத்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.
என்ன கதை?: முதலில் இந்தப் படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த மாணவர்களை பற்றியது என்று சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு சுதா கொடுத்திருந்த பேட்டியில், 'இது முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை. இரண்டு சகோதரர்கள் பற்றிய கதையாகவும் இது இருக்கும்' என தெரிவித்திருந்தார். ஏற்கனவே படம் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்களுக்கு சுதாவின் அந்தப் பேட்டி மேற்கொண்டு உற்சாகத்தை கொடுத்தது.

படக்குழுவின் அபரிமிதமான உழைப்பு: இப்படம் 60களில் நடப்பது மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. பீரியட் படம் என்பதால் பெரிய உழைப்பை படக்குழு போட்டிருக்கிறார்கள். படத்தில் போடப்பட்ட செட்டுகள் எல்லாம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்புகூட World Of Parasakthi என்கிற பெயரில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் படக்குழுவினரின் அபரிமிதமான உழைப்பை பார்க்க முடிந்தது.
செழியனாக சிவகார்த்திகேயன்: இப்படத்தில் செழியன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த கேரக்டர் கண்டிப்பாக தனது கரியரில் பெரிய பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அவர். அதேபோல் சின்னத்துரை என்ற கேரக்டரில் அதர்வாவும், திருநாடன் என்ற கேரக்டரில் ரவி மோகனும் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வைத்து ஜனவரி மூன்றாம் தேதி நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் சொன்ன விஷயம்: இந்நிலையில் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருக்கும் விஷயம் எஸ்கே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. அவர் இதுகுறித்து கூறுகையில், "பராசக்தி படம் பயங்கரமாக வந்திருக்கிறது. இடைவேளை காட்சி பாட்ஷா மாதிரி இருக்கும். படத்தின் சிறப்பான காட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஷூட்டிங்கின் கடைசி ஐந்து நாட்கள்தான் இந்த சீனை எடுத்தோம். படத்தில் சக்தி வாய்ந்த கேமியோ ஒன்றும் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











