ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்

Recommended Video

மேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

சென்னை: துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்திற்காக எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு என்ற பாடலை எழுதியிருந்தார். அதற்குப் பிறகு நம்ம வீட்டு பிள்ளை படத்தில், காந்த கண்ணழகி பாடலை எழுதியிருக்கிறார். இரண்டும் ரசிகர்கள் இடையே பெரும் ஆதரவை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ், பாரிதிராஜா, சூரி, நட்டி, சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்து இருந்தனர். சன் பிக்சர்ஸ் பேட்ட படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாரித்து இருந்தது.

Sivakarthikeyan pen for Dhruv Vikram in Adithya Varma film

இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சன் பிக்சர்ஸால் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உட்பட சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சூரி, டி.இமான் மற்றும் பல முக்கிய திரையுலக பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர். சக்ஸஸ் மீட் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படத்தை வெற்றி பெற செய்ததுக்கு நன்றி தெரிவித்து இருந்தார் டி.இமான்.

இந்த படத்தில், சிவகார்த்திகேயன் டி.இமான் இசையில் காந்த கண்ணழகி பாடலை எழுதியிருந்தார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்திற்காக எனக்கு கல்யாண வயசு பாடலை எழுதியிருந்தார். அதற்குப் பிறகு காந்த கண்ணழகி பாடலை எழுதியிருக்கிறார். இரண்டும் ரசிகர்கள் இடையே பெரும் ஆதரவை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில், இது என்ன மாயமே என்று தொடங்கும் பாடலை எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பதால் அந்த படத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் எமிட் எமிட் எமிட்டோ எனும் வரிகள் வரும்.

அதற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருக்கிறார். தமிழில் ஆதித்யா வர்மாவுக்கு அதே பாடலுக்கு வரிகள் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆதித்யா வர்மா படத்தை இயக்கி வருகிறார் கிரிசாயா. இவர் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய போது விக்ரம் பாடல் எழுதிய சிவகார்த்திக்கேயனுக்கு மேடையிலேயே நன்றி சொன்னார். சிவகார்த்திக்கேயனிடம் போனில் கேட்ட உடனே பாடலை எழுதி கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X