சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவகார்த்திகேயன்.. விக்னேஷ் சிவன்... என்னன்னு பாருங்க!

சென்னை: நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் பணியாற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெய் பீம். இந்தப் படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைம் தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

சூர்யாவுக்கு எதிர்ப்பு

சூர்யாவுக்கு எதிர்ப்பு

இந்நிலையில் இப்படத்தில் வன்னியர் சமூகத்தின் சின்னம் தவறாக காட்டப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தினர் நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார் நடிகர் சூர்யா. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

முக்கிய கதாப்பாத்திரம்

முக்கிய கதாப்பாத்திரம்

பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி 4ஆம் தேதி

பிப்ரவரி 4ஆம் தேதி

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் நேற்று வீடியோ மூலம் அறிவித்தனர். அந்த வீடியோவில் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

எதற்கும் துணிந்தவனில் சிவகார்த்திகேயன்

எதற்கும் துணிந்தவனில் சிவகார்த்திகேயன்

மேலும் படக்குழு குறித்த தகவலும் டைட்டில் கார்டுடன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் பாடல்களை எழுதியுள்ளனர்.

இருவருடனும் நல்ல நட்பு

இருவருடனும் நல்ல நட்பு

நடிகர் சூர்யாவுடன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பாண்டிங் உள்ளது. மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இயக்குநரான பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன்தான் ஹீரோவாக நடித்தார் என்பதால் அவருடனும் நல்ல நட்பு உள்ளது.

Recommended Video

Jai bhim ராஜாகண்ணு மனைவிக்கு 15 லட்சம் வழங்கிய Suriya
இமான் இசை

இமான் இசை

இதனால் இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் முன்பே அறிந்திருப்பார் என தெரிகிறது. இருப்பினும் சிவ கார்த்திகேயன் எழுதிய பாடல் குறித்த தகவல் வெளியாகவில்லை. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி இமான் இமையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X