சிக்ஸர் விளாசும் சிவகார்த்திகேயன்! என்னாமா பேட்டிங் செய்யறாரு! ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை: நடிகர் சிவகார்த்தியேகன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. சினிமாவில் தீவிரமாக உழைப்பினையும் ஈடுபாட்டையும் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு சிவகார்த்திகேயனும் ஒரு உதாரணம். சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். சின்னத்திரையில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயன், அதனை வெள்ளித்திரையிலும் அறுவடை செய்தார்.
ஜனரஞ்சகமான கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இன்றைய வளர்ந்து வரும் கதாநாயகன் என்ற கட்டத்தைக் கடந்து, ஸ்டார் வேல்யூ உள்ள கதாநாயகனாக மாறிவிட்டார். சண்டைக் காட்சிகளுக்காக மெனக்கெடுவது, நடனக் காட்சிகளுக்காக தனியாக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது என தன்னை மிகத் தீவிரமாக தயார்படுத்திக் கொண்டார்.

ஒருகட்டத்தில் ஆக்ஷன் படங்களில் அதிக அக்கறை செலுத்திய சிவகார்த்திகேயன் இன்றைக்கு ஒரு மாஸ் நடிகராகவே வலம் வந்துகொண்டு இருக்கின்றார். இவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர், தமிழ்நாட்டினைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தியது. இந்தப் படத்தினைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நடிப்பில் பக்கா ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் கதையை விஜய்காக முருகதாஸ் உருவாக்கினார் என கூறப்படுகின்றது.

தீபாவளி ரிலீஸ்: இந்நிலையில் அமரன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடுள்ளது. இதனால் ஏ.ஆர். முருகதாஸ் உடனான படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் திரைத்துறையில் இருந்தவர்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் பொதுமக்கள் என நலிவடைந்த மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.

உதவி: அண்மையில் மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் மனைவி தனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கே சிரமப்படுவதாக கூறியிருந்தார். இது குறித்து தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு ராசு மதுரவனின் மனைவி நன்றி தெரிவித்திருந்தார்.

சிக்ஸர்: இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் இளம் பச்சை நிற டீசர்ட் அணிந்து கொண்டும் கறுப்பு நிற டிராக் பேண்ட் அணிந்து கொண்டும், தொப்பி மற்றும் ஷூ அணிந்து கொண்டு பக்கா கிரிக்கெட் ப்ளேயரைப் போல் விளையாடுகின்றார். அதிலும் ஒரு பந்தினை அசால்ட்டாக சிகஸ்ர் விளாசி அசத்துகின்றார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











