செல்லக்குட்டியுடன் பொங்கல் வைத்த சிவகார்த்திகேயன்: வைரல் புகைப்படம்
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயன் தனது செல்ல மகளுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அழகுத் தமிழில் ட்வீட்டி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
ஆராத்யா
சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராத்யாவுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பொங்கல்
சினேகா தனது வீட்டில் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மனைவி
நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் பொங்கல் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலை
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி பொங்கல் பண்டிகை அன்று வேலைக்கு சென்றுள்ளார். அதனால் வேலை பார்த்தபோது செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நிஷா
பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவி நிஷாவுடன் சேர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











