சிவகார்த்திகேயன் தோளில் மஞ்சள் துண்டு.. பராசக்தி லுக்.. எஸ்கே என்ன கலைஞர் கருணாநிதியா?.. என்னங்க இது?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஜனவரி பத்தாம் தேதியே படம் ரிலீஸாகியிருக்கிறது. படத்தை சிலர் பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள்.
சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்குவதாக இருந்தார் சுதா கொங்கரா. அதில் சூர்யா, துல்கர் சல்மான் நஸ்ரியா நசீம், விஜய் வர்மா நடிப்பதாக இருந்தது. திடீரென சூர்யா அப்படத்திலிருந்து வெளியேற; மொத்த காஸ்ட்டிங்கையும் மாற்றினார் இயக்குநர். அதன்படி சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன், துல்கருக்கு பதில் அதர்வா, விஜய் வர்மாவுக்கு பதில் ரவி மோகன், நஸ்ரியாவுக்கு பதில் ஸ்ரீலீலா உள்ளே வந்தார்கள்.
படத்தின் கதை: இப்படத்தின் கதை ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அதுவாக மட்டுமில்லாமல் அதற்கு சகோதர பாசம் உள்ளிட்ட விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. சென்சேஷனலான கதையை திரைக்கதையாக்கி இருப்பதால் கண்டிப்பாக இப்படம் சமூகத்தில் பெரிய விவாதங்களை கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்கேவுக்கு 25ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கு படம்?: பத்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படமும் வருகிறது. எனவே பராசக்தி Vs ஜனநாயகன் என்ற நிலைமை இந்த ஆண்டு பொங்கலுக்கு வந்திருக்கிறது. படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் இப்படத்தை பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் படத்தை வெகுவாக கொண்டாடிவருகிறார்கள். நிச்சயம சிவா மற்றும் சுதாவின் கரியரில் பராசக்தி முக்கியமான இடத்தை பெறும் எனவும் அடித்து சொல்கிறார்கள்.
புதிய லுக்: 1960களில் இப்படத்தின் கதை நடப்பதாக இருக்கிறது. இதனால் நடிகர்களின் லுக், கதை நடக்கும் லொக்கேஷன், செட்டுகள் என அனைத்திலும் படக்குழு வெறித்தனமாக உழைத்திருக்கிறது. World Of Parasakthi வீடியோவில் அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. சிவகார்த்திகேயனின் லுக்கும் பட்டையை கிளப்பின. இப்போது புதிய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. அதில் கருப்பு சட்டை அணிந்தபடி; தோளில் மஞ்சள் துண்டை போட்டபடி இருக்கிறார் அவர்.
கலைஞர் கருணாநிதியா?: இந்த லுக் எஸ்கே ரசிகர்களிடம் அதீத உற்சாகத்தை எழுப்பியிருக்கிறது. அதேசமயம் ரசிகர்களில் ஒருதரப்பினரோ, என்னது இது மஞ்சள் துண்டு, கருப்பு சட்டையெல்லாம் போட்டிருக்கிறார். அதை பார்க்கையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் நினைவுக்கு வருகிறார் என்று பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. அதேசமயம் இந்த புகைப்படமே எடிட் செய்யப்பட்டதுதான். அவர் மஞ்சள் துண்டெல்லாம் போடவில்லை; ப்ரவுன் நிற சால்வைதான் அணிந்திருக்கிறார். வேண்டுமென்றே சிவாவை டார்கெட் செய்ய இப்படி ஒரு புகைப்படத்தை ஒருதரப்பினர் சுத்தலில் விட்டிருக்கிறார்கள் எனவும் பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











