ஜெயிப்போம்.. கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு.. கொரோனா இல்லாத திருப்பூர்!
சென்னை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக திருப்பூர் கலெக்டர் பதிவிட்ட டிவீட்டை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியாவில் போடப்பட்ட 3வது லாக்டவுன் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
லாக்டவுன் 4.0 சில தளர்வுகளுடன் நாளை முதல் அறிமுகமாக இருக்கிறது. அதுகுறித்த பாதுகாப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தான் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மற்ற ஊர்களில் கொரோனா வைரஸை அந்த அந்த மாவட்ட கலெக்டர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 பேரும் முழுவதுமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும், புதிதாக எந்தவொரு கொரோனா பாதிப்புகளும் ஏற்படவில்லை சுமார், 1666 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை டிவிட்டரில் அப்டேட் செய்திருந்தார்.

அதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், கலெக்டர் விஜயகார்த்திகேயனை பாராட்டி, உங்கள் சேவை தொடரட்டும், உங்களை போன்று அயராது உழைப்பவர்களுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு இருக்கும் என்றார்.

சிவகார்த்திகேயனின் டிவீட்டை பார்த்து சந்தோஷப்பட்ட திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், "நன்றி பிரதர், நம்ம Covid Control action ல நாம ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது! ஓவ்வோரு தடவையும் ஜெயிக்கணும்.. ஜெயிப்போம்" என சீமராஜா பட வசனத்தை பதிவிட்டு பதில் அளித்திருந்தார்.

அதற்கு ரிப்ளை செய்த நடிகர் சிவகார்த்திகேயன் "ஜெயிப்போம்" என பாராட்டியிருந்ததை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











