ரியல் டான் உதயநிதி ஸ்டாலின் தான்.. ஒருவழியாக அந்த பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை: ஆக்சுவலா டான் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான் என நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிலுக்கு பாராட்டி தனது பாரத்தை இறக்கி வைத்துள்ளார்.

Recommended Video

நண்பர்களை சேர்த்துக்கிட்டு பண்ற எந்த வேலையும் வெற்றிதான் | Siva Karthikeyan | Nenjukku Needhi

போனி கபூர் தயாரிப்பில் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனன், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆர்ட்டிக்கள் 15 ரீமேக்

ஆர்ட்டிக்கள் 15 ரீமேக்

இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியில் வெளியான Article 15 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாலிவுட்டில் பல தென்னிந்திய படங்கள் ரீமேக் ஆகி வரும் நிலையில், தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா நடித்த இந்தி படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றன. தயாரிப்பாளர் போனி கபூர், பிங்க் படத்தை தொடர்ந்து இந்த ரீமேக் படத்தை தமிழில் தயாரித்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி டிரைலர் லாஞ்ச்

நெஞ்சுக்கு நீதி டிரைலர் லாஞ்ச்

போனி கபூர் தயாரிப்பில் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் டான்

தமிழ்நாட்டின் டான்

தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் தான் என்றும் இப்போதைக்கு அவர் வைத்தது தான் சட்டம் என டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அந்த வார்த்தை ஒரு பாரமாகவே மாறி விட்டது. இந்நிலையில், நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியீட்டு விழாவில் அந்த பாரத்தை ஒருவழியாக இறக்கி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

டான் உதயநிதி தான்

டான் உதயநிதி தான்

இந்நிலையில், நேற்று நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ஜாலியா உதய் சார் தமிழ்நாட்டின் டான் என சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டுப் போனார். ஆனால், அது வேறலெவலில் வெடித்து விட்டது. ஆனால், ஆக்சுவலா டான் என்றால் அது உதய் சார் தான் என பேசியதும் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் பலரும் கைதட்டி பெரும் ஆரவாரம் செய்தனர்.

டானுக்கு விளக்கம்

டானுக்கு விளக்கம்

டானுக்கு ஆயிரம் மீனிங் இருக்கு.. கையில ஆயுதம் வச்சிருக்கிறவங்கள டானுன்னு சொல்லலாம். மனசுல தைரியம் வச்சிருக்கிறவங்களையும் டானுன்னு சொல்லலாம் என பதிலுக்கு பாராட்டி உதயநிதி ஸ்டாலினையும் அவரது ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டார் சிவகார்த்திகேயன். மேலும், தனது நண்பர் அருண்ராஜா காமராஜிடம் தனக்கும் ஒரு கதை ரெடி பண்ண கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X