For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரியோ ராஜை ஹீரோவாக்கிய சிவகார்த்திகேயன்: தனுஷ் வழியில் செல்கிறாரா?

    |
    விஜய் டிவி ரியோ ராஜை ஹீரோவாக்கிய சிவகார்த்திகேயன்.. வீடியோ

    சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை ஹீரோவாக வைத்து தான் தயாரிக்கும் படத்திற்கு பூஜை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

    நண்பன் அருண்ராஜா காமராஜுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் கனா படத்தை தயாரித்துள்ளார்.

    அந்த படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தை தயாரிக்கிறார் அவர்.

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். கார்த்திக் வேணு இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் ஷிரின் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    மகிழ்ச்சி

    ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

    மகிழ்ச்சி

    தான் ஹீரோவாகியுள்ள மகிழ்ச்சியை ரியோ ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த புதிய பயணத்தில் அனைவரின் ஆசியும், ஆதரவும் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தனுஷ்

    தனுஷ்

    சின்னத்திரை பிரபலமான தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் அவர் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் ரியோ ராஜை ஹீரோவாக்கியுள்ளார். தனுஷ் போன்றே சிவாவும் பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sivakarthikeyan is producing a movie with VJ Rio Raj as hero.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X