எம்.ஜி.ஆர். பாட்டை சுட்டு, விஜய் சேதுபதி ட்ரெய்லரை சுட்டு தலைப்பு வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Recommended Video

சென்னை: ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களை அழைத்து வந்து பெரிய திரையில் ஹீரோவாக்கி பார்ப்பது என்ற முடிவில் உள்ளனர் தனுஷும், சிவகார்த்திகேயனும்.

இந்நிலையில் சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜை ஹீரோவாக வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் அந்த படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
தலைப்பை வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர். அதாவது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர் பாணியில் அறிவித்துள்ளனர். அவர்கள் படத்தின் தலைப்பை சொன்ன விதமே ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
கனா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கனா போன்று இந்த படமும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











