பிக்பாஸ் கவின் படமா? எஸ்.கே.18ஆ? என்ன அப்டேட்.. குழப்பத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Recommended Video

Bigg boss Kavin in Sivakarthikeyan movie | சிவகார்த்திகேயனுடன் இணையும் கவின்!

சென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை தயாரித்து வெளியிடும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன் வந்துள்ளது.

இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான ஏலியன் திரைப்படம், ஆர்.டி. ராஜாவுக்கு ஏற்பட்ட கடன் சுமையால் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில், அந்த படத்தை தான் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பிக்பாஸ் கவின் அல்லது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்டா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் நாளை வெளியாகும் என கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஹீரோ தந்த நம்பிக்கை

ஹீரோ தந்த நம்பிக்கை

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. ஹீரோ படம் தந்த நம்பிக்கையால் தான் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் பயணிக்க கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் முடிவு செய்துள்ளது.

என்ன அப்டேட்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் கே.ஜே.ஆர். ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின் படமா?

கனா படத்தில் தர்ஷனையும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோவையும் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன், அடுத்ததாக பிக்பாஸ் கவினுக்கு ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வைரலாகின. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் குறித்த அப்டேட் என்பதால், ஒருவேளை கவின் படத்தின் அப்டேட்டாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

வாழ் படமா?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் வாழ் எனும் படம் உருவாகி வருகிறது. அந்த படத்தை கே.ஜே.ஆர். நிறுவனம் வெளியிடப் போவதற்கான அறிவிப்பா என்றும் சில ரசிகர்கள் மண்டையை போட்டு குழப்பி வருகின்றனர்.

எஸ்.கே. 18 அப்டேட் தான்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், தர்ஷன், கவின் இணைந்து நடிக்கவுள்ள எஸ்.கே. 18 படத்தின் அப்டேட்டாகத் தான் இருக்கும் என்றும் சில ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சீமராஜா 2வா?

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ள அப்டேட் போஸ்டரில், ராஜா காலத்து கத்தி இருப்பதால், ஒருவேளை சீமராஜா 2 எடுக்கப் போறாங்களோன்னும் சில நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X