சிவகார்த்திகேயனின் புதிய படம் குரங்கு பெடல்.. டீசர் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு குரங்கு பெடல் என பெயர்வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் கோடை விடுமுறையில் தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த அயலான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தாயரிக்கும் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் தயாராகி வருகிறது.

Sivakarthikeyan productions kurangu pedal teaser out

நடிகர் சிவகார்த்திகேயன்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்: அமரன் படத்தை தொடர்ந்து, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 ஆகிய இரு படங்களில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது. எஸ்கே23 என அழைக்கப்படும் இப்படத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ என்ற கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

குரங்கு பெடல்: இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் ஏற்கனவே சூரி நடித்து வரும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் தற்போது குரங்கு பெடல் என்ற படத்தை தயாரித்துள்ளார். மதுபானக் கடை மற்றும் வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமல்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில், காளி வெங்கட் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். குழந்தைகளை மையப்படுத்திய உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

டீசர் எப்படி இருக்கு: அந்த டீசரில், பேருந்து வசதியே இல்லாத கிராமத்தில் ஒரு சிறுவன், ஏம்மா நாம மட்டும் நடந்தே போகிறோம் என கேட்க, நீ படிச்சி பெரிய ஆளாகி ஏரோபிளைன்லக்கூட போ உன்னை யார் வேண்டாம்னு சொன்னது என்று சொல்ல, ஒரு சைக்கிள் வாங்க படிச்சி பெரிய ஆள் ஆகணுமா என்று சொல்லி, குழந்தைகள் சைக்கிள் பழகும்போது குரங்கு பெடல் போடுவது டீசரில் இடம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த டீசர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X