நல்ல மனசு.. வடிவேலு பாலாஜி குடும்பத்திற்கு இப்படியொரு உதவியை செய்யப் போகும் சிவகார்த்திகேயன்

சென்னை: மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உடன் விஜய் டிவியில் ஒண்ணா வேலை பார்த்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Recommended Video

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன்

இருவரும் இணைந்து அது இது எது ஷோவை வேற லெவலில் கொண்டு வந்து பிரபலமாக்கினர்.

வடிவேலு பாலாஜியின் மரண செய்தி, நடிகர் சிவகார்த்திகேயனை வெகுவாக பாதித்துள்ளது.

அது இது எது

அது இது எது

விஜய் டிவியில் பிரபலமான அது இது எது ஷோவை நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கி வந்தார். ஹீரோவாக பிரபலம் ஆவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் காம்பேர் பண்ண இந்த ஷோவில் வரும் சிரிச்சா போச்சு செக்மென்ட்டில் வந்திருக்கும் கெஸ்ட்டை சிரிக்க வைக்கும் வேலையை நடிகர் வடிவேலு பாலாஜி திறம்பட செய்வார்.

நல்ல நட்பு

நல்ல நட்பு

வடிவேலு பாலாஜி உடன் விஜய் டிவியில் ஒன்றாக இணைந்து வேலை பார்த்த நிலையில் ஏற்பட்ட உறவு, சிவகார்த்திகேயன் ஹீரோ ஆன பிறகும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் இணைந்து கலக்கிய ஏகப்பட்ட எபிசோடுகளை ரசிகர்கள் மீண்டும் யூடியூப் மற்றும் ஹாட் ஸ்டார்களில் பார்த்து சிரிக்க முடியாமல் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

பசங்களோட படிப்பு

பசங்களோட படிப்பு

நடிகர் வடிவேலு பாலாஜியின் இரு குழந்தைகளின் படிப்பு செலவை முற்றிலுமாக தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார் என்பதை கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குநர், தாம்சன் தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் போன் பண்ணி விசாரித்த சிவகார்த்திகேயன், மரணம் பற்றியும் விசாரித்து, வேதனைப் பட்டதாக கூறியுள்ளார்.

திருமண நிகழ்ச்சியில்

திருமண நிகழ்ச்சியில்

திருமண நிகழ்ச்சியில் மேலும், 6 மாதங்களுக்கு முன்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பாலாஜியை சந்தித்து மிக நீண்ட நேரம் அவருடன் சிரித்து மகிழ்ந்து உரையாடிய தகவல்களையும் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். வடிவேலு பாலாஜி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X