ரஜினி, கமலுக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன்!
Recommended Video

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'வேலைக்காரன்' பட வேலைகளில் பிஸியாக உள்ளார். 'வேலைக்காரன்' படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் குறிவைத்து வெளிவரவுள்ளதால் இறுதிகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன் 'இவ்வளவு பெரிய ஆதரவு தந்த அன்பான சகோதர சகோதரிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி' எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களையும், புதிய படம் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது ட்விட்டர் மூலம் பகிர்ந்துகொள்வார். அதனால், அவருக்கு ஃபாலோயர்ஸ் அதிகமாக இருக்கிறார்கள்.
ட்விட்டரில் அதிக ஃபாலோயஸ் பெற்றுள்ள தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில்தான் நடிகர் தனுஷ் ட்விட்டரில் 6 மில்லியன் ஃபாலோயர்ஸ் எனும் சாதனையைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் 4.33 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். சமீபமாக ட்வீட்டுகளை தெறிக்கவிடும் கமல்ஹாசனுக்கு 3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











