தனுஷின் ராயன் பட வசூலை முறியடிக்குமா அமரன்?.. சிவகார்த்திகேயன் போடும் பக்கா ஸ்கெட்ச்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோதின. அந்த 2 படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை விட தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் சற்று கூடுதல் வசூல் என கூறப்பட்டது.

தனுஷ் இயக்கி நடித்து வெளியான அவரது 50வது படமான ராயன் திரைப்படம் அதிகபட்சமாக இந்த ஆண்டு 150 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படமும் 100 கோடி வசூல் வேட்டை நடத்தி இந்த ஆண்டின் சிறந்த படமாக மாறியுள்ளது.

amaran sivakarthikeyan box office

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அமரன் திரைப்படம் 100 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டுமா? தனுஷின் ராயன் படத்தை வசூலில் முந்துமா? என்கிற கேள்விகள் சினிமா வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ளன.

மும்முனை போட்டி: தமிழ் சினிமாவில் பொறுத்தவரை இந்த தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட 3 படங்கள் வெளியாகின்றன. மேலும், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் தமிழில் வெளியாகிறது. இதில், பெரிய படமாக பார்க்கப்படுவது சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான். ஜெயம் ரவி மற்றும் கவின் ஏற்கனவே அமரன் படம் வெற்றிப் பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் vs சிவகார்த்திகேயன்: கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் vs விஜய் போட்டி எப்படி சினிமாவில் இருக்கிறதோ அந்த அளவுக்கு சமீப காலமாக தனுஷ் vs சிவகார்த்திகேயன் போட்டி நிலவி வருகிறது. சிம்புவின் படங்கள் லேட்டாகி வரும் நிலையில், அவர் இந்த போட்டியில் சற்றே விலகி நிற்கிறார். பொங்கல் போட்டியில் பெரிதாக யாரும் வெற்றிப் பெறாத நிலையில், அடுத்ததாக மீண்டும் தனுஷ் vs சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபிஸ் போட்டி தற்போது பெரிதாக பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் முதல் ஓவர்சீஸ் பிசினஸ் வரை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டது முதல் சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அமரன் இசை வெளியீட்டு விழா என சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் அமரன் படத்திற்கான புரமோஷன் பணிகளை தீயாக நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் கமல்ஹாசன் மற்றும் சோனி நிறுவனம் ஓவர்சீஸ் பிசினஸை கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

150 கோடி வசூல் வருமா?: தீபாவளிக்கு 3 படங்களுடன் போட்டி போடவுள்ள சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு 150 கோடி வசூல் படமாக மாறுமா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. டாக்டர் மற்றும் டான் படங்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன் மீண்டும் அந்த இடத்தில் இருந்து அப்படியே சரிந்து விட்டார். அவருக்கு அமரன் படம் 150 கோடி முதல் 200 கோடி வசூல் படமாகவே மாறும் என்றும் தனுஷின் ராயன் படத்தின் வசூலை அமரன் முந்தும் என்றும் சினிமா வட்டாரத்தில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X