Exclusive: விஜய்யோடு நேரடி மோதல் தான்.. ஒரு கை பார்த்திட சிவகார்த்திகேயன் ரெடி.. பிரபலம் பளிச்!

சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் என்ற கட்டத்தைக் கடந்து வளர்ந்த நடிகர் என்ற நிலைக்கு வந்துவிட்டார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மினிமம் கேரண்டி என்ற அளவுக்கு வசூல் குவித்து வருகிறது. இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படமான சேயோன் படத்தின் ப்ரோமோ கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கிளிம்ஸில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் நேரடியாக விஜய் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சவால் விடுவதைப் போல இருக்கிறது என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நமது ஃபிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதாவது, " சேயோன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவில் இடம் பெற்றுள்ள வசனங்கள் படத்தில் இருந்தாலும் மகிழ்ச்சி. ஆனால் இந்த வசனங்களுக்கு வேறு காரணங்கள் இல்லை என்று கூறிவிட முடியாது.

Sivakarthikeyan Ready To Face Direct Battle With Vijay Says Producer Balaji Prabhu Exclusive Interview

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்த நடிகர். "பாட்டாளம், போராட்டம்னு போயிட்டு இருந்தவனை" என்ற வசனங்கள் விஜய்க்கு எதிராக குறிப்பாக, விஜய் ரசிகர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட வசனங்களாகத்தான் நான் பார்க்கிறேன். அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தி படம் அமரன் படத்தைப் போல நன்றாக அவருக்கு கை கொடுக்கும் என்று நம்பிக் கொண்டு இருந்தார்.

சிவகார்த்திகேயன் தயார்: ஆனால் விஜய் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகிறது என்ற உடனேயே விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். பராசக்தி படத்தை போட்டு அடி அடி என்று அடித்து படத்தை ஓட விடவில்லை. விஜய்க்கு இணையாக போட்டியாக யாரும் வரக்கூடாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் விஜய்க்கு போட்டியாக வளர்ந்து வந்துவிட்டார். அந்த சூழலை விஜய் ரசிகர்கள் தான் உருவாக்கி உள்ளார்கள். கடந்த 15 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை 35 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும், தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் விஜய் உடன் வேண்டும் என்றே ஒப்பிட்டு சிவகார்த்திகேயனை அந்த இடத்திற்கு கொண்டு வந்தது விஜய் ரசிகர்கள் தான்" என்று தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan Ready To Face Direct Battle With Vijay Says Producer Balaji Prabhu Exclusive Interview

அரோக்கியமல்ல: அதேபோல், " தமிழ் சினிமாவில் மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சாமியாடி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒரு முழு படம் வரவுள்ளது. இது சூப்பரான சப்ஜெக்ட் மற்றும் நல்ல கதைக்களம். சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று கூறலாம். அதேபோல் இவரது தயாரிப்பில் வெளியாகவுள்ள படமான தாய் கிழவி படத்திற்கு எதிராக தெறி படத்தின் ரீ ரிலீஸ் என்று கூறுவது எல்லாம் சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் நடக்கும் பிரச்சாரம். அதேபோல் தாய் கிழவி படமானது ஒரு புதுமுக இயக்குநரின் படம், நடிகை ராதிகாவின் படம் என்றுதான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதை சிவகார்த்திகேயன் தயாரித்த படத்திற்கு போட்டியாக தெறி ரீ ரிலீஸ் ஆகிறது என்று கூறுவது ஆரோக்கியமானது அல்ல" என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X