ஜேசன் சஞ்சய் சொன்ன கதை.. நிராகரித்த சிவகார்த்திகேயன்?.. காரணம் விஜய்யின் குடும்ப பஞ்சாயத்தா?
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். முதல் படமே லைகா புரொடக்ஷன்ஸுக்காக இயக்குகிறார். மிகப்பெரிய பேனரின் கீழ் இயக்குநராக ஜேசன் அறிமுகமாவதால் இதில் ஹீரோவாக யார் நடிப்பார் என்ற கேள்வி கடந்த பல மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் ஜேசன் சஞ்சய் சொன்ன கதையை சிவகார்த்திகேயன் நிராகரித்துவிட்டதாக ஒரு தகவல் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். விஜய் ஃபேமஸான நடிகராக இருப்பதால் சஞ்சய்யும் நடிகராக வலம் வருவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநராக வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அதனையடுத்து கனடாவில் அவர் அதுதொடர்பாக படிக்கவும் செய்தார். படித்துக்கொண்டிருந்தபோதே சஞ்சய்; புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பலரையும் ஈர்த்தது. எனவே விரைவில் இயக்குநராக அறிமுகமாகி விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

லைகாவுடன் கூட்டணி: இந்தச் சூழலில் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். லைகா நிறுவனம் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. அதற்கான அக்ரீமெண்ட்டில் விஜய் மகன் சஞ்சய் கையெழுத்து போடும் புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து சஞ்சய்யின் முதல் படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வியும் பலரிடம் பலமாக எழுந்திருக்கிறது.
விஜய்க்கு தெரியாது?: இதற்கிடையே சஞ்சய் இயக்குநர் ஆகப்போகிறார் என்ற அறிவிப்பு வரும்வரை அவர் செய்த மூவ்கள் பற்றி விஜய்க்கு தெரியாது என்று ஒரு தகவல் ஓடியது. மேலும் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதால் அவர் தனது மகன் மற்றும் மகளுடன் லண்டனுக்கு சென்றுவிட்டார். தமிழ்நாடு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திதான் என விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே விஜய் அரசியல் கட்சி தொடங்கியது, GOAT படத்தின் ஷூட்டிங் என பிஸியாக இருக்கிறார்.
யார் ஹீரோ?: ஜேசன் சஞ்சய் படம் இயக்கப்போகிறார் என்று அறிவிப்பு வெளியானாலும் யார் அதில் ஹீரோவாக நடிப்பார் என்று தெரியாமல் இருக்கிறது. விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ், கவின் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியானாலும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் சொன்ன கதையை சிவகார்த்திகேயன் நிராகரித்துவிட்டதாக புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுதான் காரணமா?: சிவகார்த்திகேயன் அந்தக் கதையை நிராகரித்தார் என்ற தகவலைவிடவும் அதற்காக சொல்லப்படும் காரணம்தான் திரையுலகில் பெரும் பேச்சாக கிளம்பியிருக்கிறது. அதாவது ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமானது விஜய்க்கு விருப்பமில்லை அல்லது அவரது கவனத்துக்கு வராமலேயே நடந்துவிட்டது; அது விஜய்க்கு பெரும் அதிருப்தியை கொடுத்திருப்பதாக கடந்த வருடம் தகவல்கள் வெளியாகின.
சூழல் இப்படி இருக்க அதிருப்தியில் விஜய் இருப்பதால் அவரது குடும்பத்துக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என முணுமுணுப்புகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் கதையில் நடித்தால் தேவையில்லாமல் விஜய்யின் வருத்தத்தை நாம் சம்பாதித்துவிடுவோமோ என்று அஞ்சிதான் சிவா நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











