சிவகார்த்திகேயன் வெளியிட்ட அட்லி பட டிரைலர்.. இரண்டு பேரும் சேர்ந்து எப்போ படம் பண்ண போறீங்க?

சென்னை: இயக்குநர் அட்லி தயாரிப்பில் வெளியாகி உள்ள அந்தகாரம் படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட புதுப்படங்கள் வரிசை கட்டி வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு புதுப்படத்தின் புரமோஷன் வேலைகளையும் படக்குழு முடுக்கி வருகிறது.

தயாரிப்பாளர் அவதாரம்

தயாரிப்பாளர் அவதாரம்

இயக்குநராக கலக்கி வரும் அட்லி, அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஏ ஃபார் ஆப்பிள் எனும் அட்லியின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகாரம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.

யார் இயக்குநர்

யார் இயக்குநர்

இயக்குநர் அட்லி தயாரித்துள்ள இந்த படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார். கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் மற்றும் பூஜா ராமசந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் என இரு படங்களிலும் நடித்து கலக்கி வரும் அர்ஜுன் தாஸ் இந்த படத்தின் டிரைலரிலும் மிரட்டுகிறார்.

லோகேஷ் பாராட்டு

லோகேஷ் பாராட்டு

அட்லி தயாரிப்பில் உருவான இந்த அந்தகாரம் படத்தை லாக்டவுனில் பார்த்த மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்த படத்தை பார்த்து மிரண்டு போனேன் என்றும், விக்னராஜன் எழுத்துக்கு நான் தீவிர ரசிகன் என்றும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் இந்த படம் ஒடிடியில் வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் ரிலீஸ்

இந்நிலையில், தற்போது அந்தகாரம் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்துள்ளார். மற்ற மொழிகளிலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி உள்ளது. பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் டிரைலரை பகிர்ந்து படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். பார்வையற்ற நாயகனாக வினோத் கிஷன் நடிப்பில் மிரட்டுகிறார்.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட புதிய படங்கள் திரையில் வெளியாகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அந்தகாரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாகிறது என்றும் டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா நெட்பிளிக்ஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுடன் எப்போ

சிவகார்த்திகேயனுடன் எப்போ

ராஜா ராணி படத்திலேயே சிவகார்த்திகேயன் தான் ஹீரோ என ஆரம்பத்தில் ஆசை காட்டி விட்டு, பின்னர் ஆரி, ஜெய்யை வைத்து அந்த படத்தை அட்லி இயக்கினார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால், சீக்கிரமே சிவகார்த்திகேயனை வைத்து அட்லி ஒரு பிளாக்பஸ்டர் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X