சூப்பர் ஹீரோதான்.. கன்ஃபார்ம் செய்யும் ஹீரோ செகண்ட் லுக்!

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

சென்னை: கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்திரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் 2வது லுக் வெளியாகி உள்ளது.

இந்த செகண்ட் லுக் போஸ்டரை படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

முதல் போஸ்டரில் கையில் வைத்திருந்த முகமூடியை இரண்டாவது போஸ்டரில் முகத்தில் மாட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

காமெடி நாயகனாகவும் காதல் இளவரசனாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், சமீப காலமாக மாஸ் ஹீரோவாகும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தற்போது இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்திரன் இயக்கும் படத்தில் மாஸ் ஹீரோலாம் இல்லை அதற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று சூப்பர் ஹீரோவாகும் முயற்சியில் சிவகார்த்திகேயன் இறங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் டிவீட்

தல60 பூஜை தினம் மற்றும் 'அக்கா' அர்ச்சனாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், திடீரென எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சிவகார்த்திகேயன் தனது ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஹீரோவா? முகமூடியா?

ஹீரோவா? முகமூடியா?

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான முகமூடி படம் டார்க் நைட் படத்தின் தழுவலாக தமிழில் எடுக்கப்பட்ட முயற்சி என்றாலும், சரியான பொருட் செலவு மற்றும் திரைக்கதை இல்லாததால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ செகண்ட் லுக்கில், முகமூடி படத்தில் ஜீவா இருந்தது போலவே சிவகார்த்திகேயனின் தோற்றம் இருப்பதால், இது ஹீரோவா? இல்ல முகமூடியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏலியன் படம் என்ன ஆச்சு?

ஏலியன் படம் என்ன ஆச்சு?

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் மீதுள்ள நம்பிக்கையால் ஹீரோ படம் நிச்சயம் நல்ல திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலக ரசிகர்களும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ஹீரோ படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாரின் ஏலியன் படம் என்ன ஆச்சு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X