ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான கொஞ்சம் பேசு வீடியோ பாடல்... ரிலீஸ் செய்த சிவகார்த்திகேயன்
சென்னை : காதலை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள இசை வீடியோ பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மெலடி இசை பாடலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை வெளியிடுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பை ராஜ முருகனே மேற்கொண்டுள்ள நிலையில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

புதிய வீடியோ ஆல்பம்
டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் ராஜூ முருகனின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய வீடியோ ஆல்பம் கொஞ்சம் பேசு. மெலடி இசைப்பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் சஞ்சிதா ஷெட்டி மற்றும் சஞ்சய் நடித்துள்ளனர். யுகபாரதியின் வரிகளில் நரேன் இசையமைப்பில் பாடல் வெளியாகியுள்ளது.

சஞ்சிதா ஷெட்டி சிறப்பு
குக்கூ ரெக்கார்ட்ஸ் குழு இயக்கியுள்ள இந்த வீடியோ ஆல்பத்தில் பாடலை பிரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கட்ரமணன் ஆகியோர் பாடி பாடலுக்கு உயிரூட்டியுள்ளனர். ஹீரோ புதுமுகமாக உள்ள நிலையில் சஞ்சிதா ஷெட்டி, பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிப்படும் காதல்
விவாகரத்திற்கு விண்ணப்பிக்கும் ஒரு ஜோடியின் வாழ்வில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்தும் மாற்றத்தை மையமாக வைத்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஹீரோயினுக்கு வரும் கொரோனா காரணமாக அவர், தனிமைப்படுத்தப்பட அவர்களை அந்த கொரோனா பாதிப்பு எவ்வாறு ஒன்று சேர்த்தது என்பதை இந்த வீடியோ கதைக்கருவாக கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன் வெளியீடு
இதனிடையே இந்த வீடியோ பாடலை நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இந்த குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











