சிவகார்த்திகேயன் வெளியிட்ட சில நேரங்களில் சில மனிதர்கள் அட்டகாச பாடல்
சென்னை : நவீன சரஸ்வதி சபதம் படம் மூலம் பிரபலமானவர் விஷால் வெங்கட்.
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.
புகழ்பெற்ற இந்த தலைப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் அட்டகாசமான பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சில நேரங்களில் சில மனிதர்கள்
பீம்சிங் இயக்கத்தில் கடந்த 1977ல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சில நேரங்களில் சில மனிதர்கள். படத்திற்கு இசையமைத்திருந்தார் எம்எஸ் விஸ்வநாதன். ஜெயகாந்தனின் நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

விஷால் வெங்கட் இயக்கம்
இந்நிலையில் இதே தலைப்புடன் அசோக் செல்வன், நாசர், ரேயா, ரித்விகா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க விஷால் வெங்கட் இயக்கத்தில் புதிய படம் உருவாகியுள்ளது. இவர் முன்னதாக நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட ட்ரெயிலர்
இந்தப் படத்தின் ட்ரெயிலரை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் படத்தின் பாடலை வெளியிட்டுள்ளனர்.

சிறப்பான பாடல் வெளியீடு
மிகவும் சிறப்பான வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் தூண்டும் வகையில் காணப்படுகிறது. லிரிக் வீடியோவாக இந்தப் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பிரபலமானவர்களை கொண்டு படத்தின் ஒவ்வொரு விஷயமும் வெளியாவதும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

எதிர்பார்ப்பில் படம்
இதுமட்டுமின்றி பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பயன்படுத்திய தலைப்பை இந்தப் படத்திற்கு பயன்படுத்தியுள்ளதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்தப் பாடலை சேத்தனுடன் இணைந்து ஆன்ட்ரியா பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











