20 ரூபாய் டோக்கன்.. நோட்டாவுக்கு காசு.. அரசியல் நய்யாண்டியுடன் பட்டையை கிளப்பும் மண்டேலா டீசர்!
சென்னை: நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள மண்டேலா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகன் முதல் முறையாக இந்த படத்துக்கு க்ரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கி உள்ளார். தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட அரசியல் நய்யாண்டியுடன் இந்த டீசர் வெளியாகி இருக்கிறது.

நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவில் மக்கள் புரட்சியை ஏற்படுத்திய தலைவர் நெல்சன் மண்டேலாவின் பெயரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
ஏகப்பட்ட படங்களின் டீசர்கள் மற்றும் டிரைலர்களை வெளியிட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் யோகி பாபுவின் மண்டேலா டீசரையும் தற்போது தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்துலயும் எப்பவும் போல கலக்குங்க என யோகி பாபுவை வாழ்த்தி உள்ளார்.

அரசியல் நய்யாண்டி
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏகப்பட்ட அரசியல் நய்யாண்டிகளுடன் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நகைச்சுவை படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் அரசியல் காமெடிகள் அதிகளவில் உள்ளன. இந்த தருணத்தில் படமே வெளியானாலும் சிறப்பாகத் தான் இருக்கும்.

20 ரூபாய் டோக்கன்
தேர்தலை முன்னிட்டு கட்சிக்காரர்கள் 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது போல காட்சியை இயக்குநர் வைத்து ரணகளப்படுத்தி உள்ளார். அவன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தா நாம 50 ரூபாய் டோக்கன் கொடுப்போம் என அரசியல் பேசும் வசனமும் சிறப்பாக அமைந்துள்ளது.
நோட்டாவுக்கு காசு
வெளியூர் ஆட்களை தேர்தல் சமையத்தில் அழைத்து வருவது, வெளிநாட்டு காரர்களை அழைத்து வருவது என ரகளை கிளப்பும் டீசரில், நெல்சன் மண்டேலாவாக முடி திருத்தும் நபராக வரும் யோகி பாபு நோட்டாவை ஒரு கட்சியென நினைத்துக் கொண்டு நோட்டாவுக்கும் காசு கொடுத்தா தான் ஓட்டு என அதகளம் பண்ணி உள்ள டீசரை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











